சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்கமுடியுமா 2020 : இந்த முழு நாடும் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது... பலகோடி பேர் கேட்ட வசனம்

செல்போனில் கால் செய்தாலே லொக் லொக் என்ற இருமலுடன் தொடங்கி அதை தொடர்ந்து ஒளிபரப்பான காலர் ட்யூனையும் பலரும் கேட்டிருப்போம். 2020ல் பல கோடி பேர் அதிகம் கேட்ட காலர் ட்யூனாகி விட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: செல்போனில் கால் செய்தால் முன்பெல்லாம் காதுக்கு இனிமையாக பாட்டு ஒலிக்கும். அது நல்ல பாட்டாக இருந்தால் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். காலர்ட்யூன் வைப்பவர்களின் மனநிலையைப் பொறுத்து அது மாறும். கொரோனாவிற்கு பின்னர் லொக் லொக் இருமலும் நாடு முழுவதும் கொரோனா உடன் போராடுகிறது என்ற வசனமும்தான் கேட்கிறது. 2020ஆம் ஆண்டில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட காலர் ட்யூனாகி விட்டது இந்த கொரோனா வசனம்.

2020ஆம் ஆண்டு பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. வேலைக்காகவும், படிப்புக்காகவும் சொந்த ஊரை விட்டும் சொந்தங்களை விட்டும் வெளியூர் சென்றவர்களை சோதனைக்கு ஆளாக்கி விட்டது. கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைக்கு பலரும் மாறினர்.

Unforgettable 2020: This whole country is fighting against the corona

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. விடுதிகளில் தங்கியிருந்த பல மாணவர்கள் வீடு திரும்பினர். எத்தனையோ மாற்றங்கள் 2020ஆம் ஆண்டு நடந்தாலும் நாடு முழுவதும் கோவிட் 19க்கான விழிப்புணர்வு காலர்ட்யூன் வசனம் பல மொழிகளில் ஒலிபரப்பானது.

இன்று முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளிகளுடன் அல்ல. அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்ற வசனத்தை தினமும் 10க்கும் மேற்பட்ட முறையாவது அலைபேசி வழியாகக் கேட்க நேரிட்டிருக்கும்.

மார்ச் மாதம் தொடங்கிய இந்த காலர் டியூனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டது என்றாலும் 2020ஆம் ஆண்டு இறுதி வரைக்குமே நாட்டு மக்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ரயில் பெட்டிகள் மருத்துவ வார்டுகளாக மாறின.

கொரோனா என்னும் கொள்ளை நோய்க்கு ஒன்றரை லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து உள்ளன. பல கோடீஸ்வரர்கள் கொரோனாவிற்கு பலியாகினர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் தொட்டுப்பார்த்தது கொரோனா. இந்த உலகத்தில் வாழ தகுதி படைத்தவர்கள் குணமடைந்தனர். ஆயுள் முடிந்தவர்களை கொரோனா அழைத்துக்கொண்டு போய்விட்டது.

முன்பு சாதாரண கொரோனாவாக இருந்து இப்போது உருமாறிய கொரோனாவாக அப்கிரேட் ஆகியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. பிறக்கப்போகும் புத்தாண்டாவது நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியமான புத்தாண்டாக அமைய வேண்டும் என்பதே பலரது வேண்டுதலாகும். இந்த 2020ஆம் ஆண்டு பல தலைமுறைக்கும் நினைவு வைத்து பேசக்கூடிய மறக்கமுடியாத ஆண்டாக அமைந்து விட்டது.

English summary
2020 has been an unforgettable year for many. The whole country is fighting with Corona. This corona verse has become the most heard collar tune in 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X