ரேசன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்..கூகுள் பே பண்ணலாம்..கேஸ் சிலிண்டர் வாங்கலாம் - அமைச்சர் அறிவிப்பு
சென்னை: ரேசன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதார்களுக்கு அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கார்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஒன்றாகும்.
தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல கடைகள் சொந்த கட்டிடங்கள் இல்லாமல் இருப்பதால் போதிய இடவசதி இல்லாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் இருப்பதால் பல இடங்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

ஐ.பெரியசாமி
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று பார்த்தாலே பாழடைந்த கட்டிடங்களில் இயங்கும். அங்குள்ள பொருட்கள் பாதி தரமற்றதாகவே இருக்கும். காரணம் இலவசமாக தரப்படும் பொருட்கள் எப்படி இருந்தால் என்ன என்ற அலட்சியம் ஒரு பக்கம். எடை குறைவாகவாகவும் பல நேரங்களில் பொருட்களை விநியோகம் செய்வார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே ரேசன் கடைகளில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

மாதிரி ரேசன் கடைகள்
முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும் படிப்படியாக google pay, paytm போன்ற UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதி மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் விற்பனை
நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். காலிடம் இருப்பின், 10 முதல் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உணவு பொருள் கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எவர்சில்வர் பாத்திரங்கள்
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை எவர்சில்வர் கொள்கலனில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்புகளில் அடுக்கிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்

அருகிலேயே ரேசன் கடை
அதியாவசிய பொருட்களை பெற மக்கள் 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு எனவும் அமைச்சர் ஐ. பெரியசாமி குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு படிப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி புதிய ரேஷன் கடைக்கான கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டைலான லுக்கில் போதுமான இடவசதி உடன் உள்ள ரேஷன் கடைகளின் மாதிரி புகைப்படம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications