சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்.. இந்த அறிவிப்பு மட்டும் வந்தால்.. Work From Home பண்றவங்களுக்கு ஜாலிதான்! நடக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலத்தில் கடந்த இரண்டரை வருடமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு வரி சலுகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2022 மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    இந்த அறிவிப்பு மட்டும் வந்தால்.. Work From Home பண்றவங்களுக்கு ஜாலிதான்! | Oneindia tamil

    2020 மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

    கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்! கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

    5 மாநில சட்டசபை தேர்தலில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தனி நபர் வருமான வரியில் சலுகைகள் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    தனி நபர் வருமான வரி

    தனி நபர் வருமான வரி

    தனி நபர் வருமான வரியில் அதிக சலுகைகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை முன்பை விட இப்போது அதிகம் ஆகியுள்ளது. மொத்தமாக தனி நபர் வருமான வரியையே ஒழிக்க வேண்டும். இதற்கு மாறாக செலவு செய்வதற்கு ஏற்றபடி வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மொத்தமாக தனி நபர் வருமான வரி ஒழிக்கப்பட வாய்ப்புகள் குறைவு. இந்த நிலையில் இதில் சில சிறப்பு சலுகைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

    வீட்டில் இருந்து வேலை

    வீட்டில் இருந்து வேலை

    முக்கியமாக மாத சம்பளம் பெறுவோருக்கான வரி கழிவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. தற்போது கொரோனா காலம் என்பதால் பல ஆயிரம் ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்து work from home பார்க்கிறார்கள். இதற்கான செலவை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது கிடையாது. அலுவலகம் சென்றால் அங்கேயே இணையம் வழங்கப்படும். ஆனால் பல ஆயிரம் பேர் வீடுகளில் இருப்பதால் இணைய செலவிற்கு சொந்த வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டியதாக உள்ளது.

    புதிய வகை செலவுகள்

    புதிய வகை செலவுகள்

    இது போக வீட்டிலேயே அலுவலகம் செட் செய்ய, பர்னிச்சர் வாங்க போன்ற பல்வேறு செலவுகள் இருக்கின்றன. இதெல்லாம் போக கொரோனா காலம் என்பதால் மருத்துவ ரீதியாக கூடுதல் செலவுகளும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உபகரணங்களை வாங்கவும் அதிகம் செலவு ஆகி இருக்கிறது. மேலும் குழந்தைகள் எல்லோரும் ஆன்லைன் கிளாஸ் படிக்கிறார்கள். இவர்களுக்கான உபகரணங்களை வாங்கவும் சில ஆயிரங்கள் செலவு ஆகி இருக்கும்.

     பொருட்கள் வாங்க வேண்டும்

    பொருட்கள் வாங்க வேண்டும்

    ஆனால் இந்த பொருட்களை வாங்குவதற்கான செலவை வைத்து வரியில் எந்த சலுகையும் பெறும் ஆப்ஷன் தற்போது இல்லை. இந்த நிலையில்தான் மாத சம்பளம் பெறுவோர் தாங்கள் செலுத்தும் வரியில் உள்ள நிரந்தர கழிவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது மாத சம்பளம் பெறுவோர் தாங்கள் செலுத்தும் வரியில் நிரந்தர கழிவாக 50,000 ரூபாய் உள்ளது. இதில் மேலும் 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கி வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

     எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    அதாவது தற்போது மாத சம்பளம் பெறுவோர் வரியில் நிரந்தர கழிவை 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் மின்சார செலவு அதிகரித்துவிட்டது. இணைய செலவு அதிகரித்துவிட்டது. இதனால் மாத சம்பளம் பெறுவோர் வரியில் நிரந்தர கழிவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு வரும் பட்சத்தில் இந்தியாவில் Work From Home பார்க்கும் பல லட்சம் பேருக்கு இன்பமான செய்தியாக இருக்கும்.

    English summary
    Union Budget 2022: Will People doing work from home get new tax breaks this time ?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X