தெருவுல நடந்தா கீழ்த்தரமாக பேசுவாங்க! ஸ்காலர்ஷிப் கூட கிடைக்காது! இந்தி அனுபவங்களை பகிர்ந்த நிர்மலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தி கற்றுக் கொண்டால் தமிழ் பற்று குறைந்து விடாது எனவும், தான் படித்த காலத்தில் இந்தி படித்தால் தெருவில் நடக்கும் போது கீழ்த்தரமாக பேசுவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சார்பில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 'தி டவுன் ஹால்' என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற அமர்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் தென்பகுதியில் உள்ள மாநிலங்கள் வரி சுரண்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையை சொல்லப்போனால் சில மாநிலங்களில் வளர்ச்சி ஆனது மிக வேகமாக இருக்கும். குறிப்பாக தமிழ்நாடு பல காரணங்களால் மிக வேகமாக வளர்ந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியதும் ஆங்கிலம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கியதும் தமிழகம் முன்னேறுவதற்கான ஒரு முக்கிய காரணம்.

தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சி

தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தமிழகம் அதிகம் நகரமயப்பாக்கப்பட்ட மாநிலம். தொழில்நுட்பத் துறை மற்றும் சேவை துறை மூலம் நடைபெற்ற புரட்சி காரணமாக தமிழகம் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் நாங்கள் அதிகம் தருகிறோம் அதனால் எங்களுக்கும் அதிகமாக திருப்பித் தர வேண்டும் என கேட்டால் அது நன்றாக இருக்காது. தமிழ்நாட்டின் உள்ள மாவட்டங்கள் இதே போல் கேட்டால் கோயம்புத்தூர் மட்டும் தான் தமிழகத்தில் அதிக வருவாயை பெற்றிருக்க வேண்டும்.

 ஜிஎஸ்டி வருவாய்

ஜிஎஸ்டி வருவாய்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால் எப்படி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என கேள்வி கேட்கின்றனர். அவர்கள் சொல்வது எனக்கு புரிகிறது. இதுகுறித்து நிதி ஆணையம் ஆலோசித்து வருகிறது. அதற்காக சீரமைப்பு செய்து வருகிறோம். எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் நிச்சயமாக முடிந்தவரை செய்துள்ளோம்.

இந்தி மொழி

இந்தி மொழி

தான் படித்துக் கொண்டிருந்தபோது இந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை நினைவுகூர்ந்த நிர்மலா சீதாராமன்,"இந்தி சமஸ்கிருதம் படிப்போருக்கு கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டது உண்மையானது. தான் இப்போது வரை உதவித்தொகை மறுக்கப்பட்டு தான் வருகிறது. தான் படித்த காலத்தில் இந்தி படித்தால் தெருவில் நடக்கும் போது கீழ்த்தரமாக பேசுவார்கள். ஆனால் இந்தி கற்பதால் தமிழ் பற்று குறையாது" என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+