சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் அறிவிப்பு.. சிறுபான்மை மாணவர்கள் “ஷாக்”! மோடி அரசின் கொடூர தாக்குதல் - சிபிஎம் கனகராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிவந்த ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை இனி 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருப்பது சிறுபான்மை மாணவர்களின் கல்வி வாய்ப்பின் மீது மோடி அரசின் கொடூர தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் விமர்சித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் அட்மிஷன், டியூசன் கட்டணம், பராமரிப்பு கட்டணம் என கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.

ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்புஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்பு

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இதனால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் பயனடைந்து வந்தார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 9, 10 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்து இதர வகுப்பு மாணவர்களின் விண்ணங்களை நிராகரித்து உள்ளது.

சிபிஎம் கனகராஜ்

சிபிஎம் கனகராஜ்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது, "இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2006 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சிறுபான்மை மாணவர்களுக்கான pre matric கல்வி உதவித்தொகை திட்டம்.

திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

Pre Matric பிரிவு என்பது 1- 10 வகுப்பு வரை என்றிருந்த நிலையில். இனி Pre Matric என்பது 9 & 10 வகுப்பு மட்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. மேற்குறிப்பிட்ட அறிவிப்பின் மூலமாக சிறுபான்மையினர், பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வருடம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பல லட்சக்கணக்கான 1-8 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாது என்று ஒன்றிய அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ரத்து

விண்ணப்பங்கள் ரத்து

தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (www.scholarshops.gov.in ) விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் ஆன்லைனில் சரி பார்த்து முடித்து வரும் நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் ரத்து செய்து நீக்கி உள்ளது தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம்.

மாபெரும் அநியாயம்

மாபெரும் அநியாயம்

கடந்த மூன்று மாதமாக இந்தியா முழுமைக்கும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல பிரிவுகளில் வரும் 1-8 வகுப்பு மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து முடித்த நிலையில், தற்போது அம்மாணவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ரத்து செய்து மாபெரும் அநியாயத்தை நிகழ்த்தியுள்ளனர்.

அச்சம்

அச்சம்

இனி 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இதர கல்வி உதவி தொகைகளையும் இவர்கள் ரத்து செய்து விடுவார்கள். அதன் முதல்படி தான் இந்த முயற்சியோ என்று அச்சப்பட தோன்றுகிறது." என்று அவர் அச்சம் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Member of the state executive committee of the Marxist Communist Party Kanagaraj, has criticized the announcement by the union government, that the pre-matric scholarship provided by the central government to minority students studying from class 1 to 10 will now be given only to classes 8 and 9, as a cruel attack by the Modi government on the educational opportunity of the minority students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X