தமிழ் இந்தியாவின் பெருமை.. ”மருத்துவக் கல்வி” தமிழக அரசுக்கு அமித் ஷா வைத்த வேண்டுகோள்!
சென்னை: தமிழ் மொழியால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 2023ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி 6 சதவிகிதம் அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேக கவனம் செலுத்தி வருகிறார். இந்த மாநில முன்னேற்றம் பற்றியும், திட்டங்கள் பற்றி கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்தார்.

மத்திய அரசு வழங்கிய நிதி
தொடர்ந்து, முன்னதாக தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரி பகிர்மான தொகை ரூ.62 ஆயிரம் கோடியாகும். தற்போது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சார்பாக வரி பகிர்மான தொகையாக ரூ.1.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக மத்திய அரசு சார்பாக ரூ.8,900 கோடியாக உயர்த்தி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டத்திற்காக ரூ.3.7 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

இந்தியாவின் பெருமை
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ரூ. 1,456 கோடி செலவில் 11 மருத்துக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். தமிழ் உலகின் மிக மூத்த, பழைமையான மொழி, இலக்கிய செழுமை வாய்ந்த மொழி. தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என்று தெரிவித்தார்.

தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி
தொடர்ந்து, எனது வேண்டுகோள் என்னவென்றால் தமிழில் மருத்துவக் கல்வி மற்றும் பொறியியல் கல்வியையும் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவம் பொறியியல் படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் மருத்துவம் பற்றி பொறியியல் கல்வியை கற்கலாம்.

தமிழக அரசுக்கு வேண்டுகோள்
அதனால் தமிழில் உரிய பாடத்திட்டங்களை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதனால் தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுகொண்டுள்ளார். இதேபோல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்க என்னை அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications