பொறுக்கி.. இப்படி மெசேஜ் பண்ணலாமா? சேட்டன் பகத்தை விளாசிய "ஊர்பி".. என்ன இப்படி சொல்லிட்டாங்களே?
சென்னை: பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத்தை நடிகை மாடல் ஊர்பி ஜாவேத் பொறுக்கி, வக்கிரவாதி என்று விமர்சனம் செய்துள்ளார்.
நடிகை மாடல் ஊர்பி ஜாவேத் இன்ஸ்டா பிரபலம் ஆவார். இணையத்தில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். உடையில் புது விதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதை போட்டோவாக வெளியிடுவார்.
உதாரணமாக ஹேண்ட் பேக்கில் இருக்கும் லெதரை வைத்து உடை உடுத்துவார். சமயங்களில் பணத்தை எல்லாம் சேர்த்து வைத்து ஆடை போல மாற்றி உடையாக உடுத்துவார்.
சில சமயங்களில் வெறும் தங்க நகைகளை கோர்த்து வைத்து உடையாக உடுத்தும் வழக்கமும் இவருக்கு உண்டு. இவரின் புகைப்படங்கள்தான் சமீப காலமாக இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

டிரெண்ட்
இந்த நிலையில்தான் பிரபல எழுத்தார் சேட்டன் பகத் இவரை பற்றி கமெண்ட் செய்துள்ளார். 3 மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர் சேட்டன் பகத். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்த கால இளைஞர்கள் போன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது இல்லை. முக்கியமாக இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதே இல்லை. அவர்கள் நீண்ட நேரம் இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸ் செய்து கொண்டு இருக்கிறாரகள். எல்லோருக்கும் ஊர்பி ஜாவேத் என்பவரை தெரியும். அவர் ஏன் பிரபலமாக இருக்கிறார்.

இளைஞர்கள்
இளைஞர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஊர்பி ஜாவேத் போட்டோக்களை தங்கள் போனில் வைத்து உள்ளனர். அவரின் போட்டோக்களை வைத்து இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள். நீங்கள் தேர்வுக்கு படிக்க வேண்டிய நேரம் இது. ஆனால் அதை செய்யாமல் ஊர்பி ஜாவேத்தை டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவரின் உடைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் வேலைக்கு செல்லும் போது இதையா உங்களுக்கு எச். ஆர் கேட்க போகிறார்? ஊர்பி ஜாவேத் எத்தனை உடை அணிந்து இருக்கிறார் என்றா எச். ஆர் கேட்க போகிறார்? இல்லை அல்லவா? நீங்கள் உங்கள் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும், என்று சேட்டன் பகத்.

பதிலடி
இதற்குத்தான் ஊர்பி ஜாவேத் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த ஆண்கள் இப்படித்தான் தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், எப்போதும் பெண்கள் மீது பழி போடுகிறார்கள். நீங்கள் பொறுக்கியாக கீழ்த்தரமாக இருக்கிறீர்கள் என்பதற்காக பெண்கள் மீது தவறு சொல்ல கூடாது. அல்லது பெண்களின் உடை மீது தவறு சொல்ல கூடாது. அதோடு தேவை இல்லாமல் என்னை பற்றி அவர் ஏன் பேச வேண்டும். பெண்கள் உடை இளைஞர்களை திசை திருப்புகிறது என்று அவர் சொன்னதுதான் மிக மோசமான விஷயம். மிக தவறான விஷயம் அது. இப்படி பேசும் அவர்தான் பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்தார். அது மட்டும் பெண்களுக்கு டிஸ்டர்ப்பாக இருக்காதா? என்று ஊர்பி ஜாவேத் கேள்வி எழுப்பி உள்ளார்.

போட்டோ
இதில் சேட்டன் பகத் பேசியதாக சொல்லப்படும் 2018 மீ டூ வாட்ஸ் ஆப் சாட்டுகளை ஊர்பி ஜாவேத் வெளியிட்டு இருக்கிறார். பெண் ஒருவர் சேட்டன் பகத் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்து இருந்தார். அதில் அந்த பெண்ணிடம் சேட்டன் பகத், பாலியல் ரீதியாக பேசியதாக புகார் வைக்கப்பட்டது. இதை சேட்டன் பகத் மறுத்து இருந்தார். நான் அப்படி பேசவே இல்லை என்று மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் பகத்தை விமர்சனம் செய்து ஊர்பி ஜாவேத்.. நீங்கள் உங்களின் பாதி வயது இருக்கும் பெண்ணுக்கு மெசேஜ் செய்வது தவறு இல்லையா? நான் உடை உடுத்துவதுதான் தவறா? என்று கேட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications