வந்தவாசியில் தவெக வேட்பாளர் விரட்டியடிப்பு! ஜனநாயகன் படத்தால் கொந்தளித்த இஸ்லாமியர்கள்!
சென்னை: வந்தவாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பரப்புரைக்குச் சென்றபோது, இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி தவெக வேட்பாளருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியல் களத்திற்கு வந்திருக்கும் விஜய், ஏற்கெனவே ஏகப்பட்ட பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார். இப்படி இருக்கையில், அவர் நடப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவருக்கு புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு இன்னும் வரவில்லை. சென்சார் பிரச்சனை காரணமாக திரைக்கு வராமல் இருக்கிறது.
ஆனால், ஜனநாயகன் முழு திரைப்படமும் ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் மூலமாக மொத்த படமும் லீக் செய்யப்பட்டது. திரைப்படம் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம், திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காலம் காலமாக திரைப்படங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகத்தான் சித்தரித்து வருகின்றன. இதற்கு எதிராக எவ்வளவோ குரல்கள் எழுப்பப்பட்டாலும், இன்னும் இந்த நிலைமை மாறவில்லை.
வழக்கமான திரைப்படங்களை போல.. ஜனநாயகன் திரைப்படத்திலும் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் டென்ஷன் ஆன இஸ்லாமியர்கள், வந்தவாசி தொகுதியில் வாக்கு கேட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் உதயகுமாரை விரட்டியடித்திருக்கின்றனர்.
ஜனநாயகன் பீஸ்ட் துப்பாக்கி என தொடர்ந்துவிஜய் நடிக்கும் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளால் காட்டிட்டு எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வரீங்கன்னு மக்கள் பொளந்து விட்டு இருக்காங்க.🔥 pic.twitter.com/x6PN5h8KOk
— Dr.Aravind Raja (@AravindRajaOff) April 18, 2026
வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, உங்கள் கட்சித் தலைவர் படத்தில் எங்களை இழிவுபடுத்திவிட்டு, இப்போது ஓட்டு கேட்டு வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளரை திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.
விஜய்க்கு சிக்கல்
இது விஜய்க்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே விஜய் பிரச்சாரத்தை தொடர்ந்து கேன்சல் செய்து வருவதால், அவரை நம்பி களத்தில் இறங்கியிருக்கும் வேட்பாளர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். இது தவிர, விஜய் மேற்கொள்ளும் பரப்புரையில், அவரை பார்க்க முந்தியடித்து வரும் ரசிகர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். இதெல்லாம் விஜய் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது. இப்படி இருக்கையில் அவர் கட்சி வேட்பாளர் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டிருப்பது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா










Click it and Unblock the Notifications