சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு, 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது.

Urban local body election date : Tamil Nadu State Election Commission today will announce

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி என அறிக்கை வருகிறது எனவும், கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக வாதிட்டனர்.

தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும், தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் சந்திக்க தயாராகவே உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Urban local body election date: (நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு) It has been reported that the State Election Commission will announce the date of the urban local body elections at 6.30 pm today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X