Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uric Acid Symptoms: பெருவிரலில் வலி ஏன் வருகிறது? இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டால் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய ஆரோக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது. ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும்போது, அது மூட்டுகளில் ஊசி போன்ற படிகங்களாகப் படிந்து விடுகிறது. இதுவே கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு முதன்மை காரணமாகிறது. இந்த யூரிக் அமில அளவை எப்படி உணவு முறையிலேயே குறைக்கலாம்??

பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள பியூரின்' என்ற சத்து செரிமானம் ஆகும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இது ரத்தத்தில் கலந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற வேண்டும். ஆனால் சிறுநீரகம் அதனைச் சரியாக வெளியேற்றத் தவறினாலோ அல்லது உடலில் அதன் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, அது ரத்தத்திலேயே தங்கிப் பாதிப்புகளை உண்டாக்குகிறது.

Uric Acid Symptoms Uric Acid Diet How to reduce Uric Acid Gout Pain Relief Kidney Stone Prevention Purine Rich Foods Health Tips Tamil Joint Pain Remedies Water Content Vegetables Healthy Lifestyle High Uric Acid Treatment Foods to avoid for Uric Acid Natural Remedies for Gout Uric Acid Control Tips Kidney Health Tips

யூரிக் ஆசிட் சட்டுனு ஏறுதா

மதுப்பழக்கம், அதிகப்படியான இனிப்பு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

யூரிக் அமில பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் சட்டென்று வெளியே தெரிவதில்லை. ஆனால் பாதிப்பு அதிகரிக்கும்போது, அதிகாலை நேரங்களில் கால் பெருவிரல், கணுக்கால் அல்லது முழங்கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். அந்த இடம் சிவந்து போவதுடன், லேசாகத் தொட்டாலே வலி உயிர் போகும் அளவுக்கு இருக்கும்.

நீர்ச்சத்து காய்கறிகள்

இது தவிர, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது அல்லது சில நேரங்களில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதும் இதனுடன் தொடர்புடைய பிரச்சனைகளாகப் பார்க்கப்படுகின்றன.

உணவு முறையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.. குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், சௌசௌ மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை சிறுநீரைப் பெருக்கி, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற அமிலத்தை வெளியேற்ற உதவும். அதேபோல சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி ஆகியவை ரத்தத்தில் உள்ள நச்சுக்களைச் சுத்திகரிக்க உதவலாம் என கருதப்படுகிறது.

மூலிகைகள், பருப்பு வகைகள்

மூலிகைகளான கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றைத் துவையலாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடுவது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுமாம்..

அதேபோல பாதாம் மற்றும் வால்நட் போன்ற பருப்பு வகைகள் மூட்டுகளுக்கு வலிமையைத் தருகின்றன. இவை பொதுவாக பாதுகாப்பான உணவுகளாகவே கருதப்படுகின்றன,

ஆனால் நேரடியாக யூரிக் அமிலத்தை குறைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. இவை அனைத்தையும் விட முக்கியமானது தண்ணீர்.. ஒரு நாளைக்குத் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே யூரிக் அமிலம் சிறுநீர் வழியாகச் சீராக வெளியேறிவிடும். அதனால் ஆரம்பக்கால அறிகுறிகள் தென்படும்போதே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது சிறுநீரகப் பாதிப்பு போன்ற பெரிய சிக்கல்களிலிருந்து நம்மைக் காக்கும்.

அன்னாசி மற்றும் சப்போட்டா போன்ற பழங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை, ஆனால் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

டாக்டர் அட்வைஸ் முக்கியம்

அதேசமயம், மருத்துவ ரீதியாக பார்த்தால், யூரிக் அமில பிரச்சனைக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமே முழு தீர்வு கிடையாது என்பது முக்கியமானது... ஆரம்ப நிலையில் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவினாலும், சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு அவசியமாகும்.

அதனால் கடுமையான மூட்டு வலி, மீண்டும் மீண்டும் வீக்கம் அல்லது நீண்ட நாட்களாக அறிகுறிகள் இருந்தால், சுயமாக உணவு மாற்றங்களை மட்டும் நம்பாமல் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் பாதுகாப்பானது... அதுதான் சிறந்த ஆரோக்கியமும்கூட...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+