Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. ட்விஸ்ட்! அடித்து தூக்கிய "டிரம்ப்".. நாடாளுமன்றத்தில் முக்கிய அவையை கைப்பற்றும் எதிர்க்கட்சி?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்றுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இதன் காரணமாக அதிபர் பிடன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதிகள் சபை, செனட்டர்கள் சபை இரண்டிற்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த இடைக்கால தேர்தலான மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களில் 341 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 189ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 152 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

செனட் சபையில் 35 இடங்களில் 18 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 12ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 6 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 41 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 40 பேர்உள்ளனர். பெரும்பான்மைக்கு 51 பேர் தேவை.

பிரதிநிதிகள் சபை

பிரதிநிதிகள் சபை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்றுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட விஷயம் என்றாலும், அமெரிக்க இடைக்கால தேர்தலில் இது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிபர் பிடன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார். ஏன் அப்படி.. இது இடைக்கால தேர்தல் தானே என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால் இந்த இடைக்கால தேர்தல் காரணமாக அங்கு சட்டங்கள் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா

அமெரிக்கா

இதுவரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் பிடனின் ஜனநாயக கட்சிதான் பெரும்பான்மையோடு இருந்தது. ஒரு சட்டத்தை கொண்டு வர, நிறைவேற்ற, சில குறிப்பிட்ட விசாரணைகளுக்கு உத்தரவிட இரண்டு அவைகளிலும் மெஜாரிட்டி அவசியம். இந்தியாவில் எப்படி மக்களவை, மாநிலங்களவை இருக்கிறது. அப்படித்தான் கிட்டத்தட்ட இந்த அவைகளும். ஆனால் இதில் இரண்டிற்கும் நேரடி தேர்வு முறைதான்.

 நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இதில் பிரதிநிதிகள் சபை என்பது எந்த மாதிரியான சட்டங்கள் அவைக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும். சட்டங்களை முதலில் அவைக்கு கொண்டு வர இங்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். பின்னர் அதற்கு ஒப்புதல் அளிப்பது அல்லது ஒப்புதல் அளிக்காமல் போவது ஆகியவற்றில் செனட் சபைதான் முடிவு எடுக்கும். அதிபர் மேற்கொள்ளும் நியமனங்களை உறுதி செய்வது, சில முக்கிய விசாரணைகளுக்கு உத்தரவிடுவது போன்ற விஷயங்களிலும் செனட் சபை வாக்கெடுப்பு நடத்த முடியும்.

சட்டங்கள் சிக்கல்

சட்டங்கள் சிக்கல்

அமெரிக்காவில் அதிபர் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும், தனது முடிவுகளை சுதந்திரமாக எடுக்க வேண்டும் என்றால் இரண்டு அவைகளிலும் மெஜாரிட்டி அவசியம். முன்னாள் அதிபர் டிரம்பிற்கு இப்படி மெஜாரிட்டி கடைசி இரண்டு வருடங்கள் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் கடும் பின்னடைவை சந்தித்தார். சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். அதன்பின் வந்த பிடன் கடந்த இரண்டு ஆண்டுகள் இரண்டு அவையிலும் மெஜாரிட்டி இருந்ததால் எளிமையாக சட்டங்களை நிறைவேற்றினார்;.

பிடன்

பிடன்

ஆனால் தற்போது பிடன் இரண்டு அவையில் ஒரு அவையிலும் மெஜாரிட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்றுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இதன் காரணமாக அதிபர் பிடன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதன் காரணமாக இனி பிடன் சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

ஒப்புதல் ரேட்டிங்

ஒப்புதல் ரேட்டிங்

ஏற்கனவே அதிபர் பிடனின் ஒப்புதல் ரேட்டிங் 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதன் அர்த்தம் மக்கள் அவரின் ஆட்சியை விரும்பவில்லை என்பதாகும். அதோடு தற்போது ஒரு அவையில் மெஜாரிட்டி போனால் அவரால் சட்டங்களை நிறைவேற்ற முடியாது. முக்கியமாக காலநிலை மாற்றம், துப்பாக்கி கட்டுப்பாடு போன்ற சட்டங்களை நிறைவேற்ற முடியாது. இது பிடனுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். அதேபோல் குடியரசு கட்சியினர் டிரம்பிற்கு எதிரான 2021 யு.எஸ் கேபிட்டல் தாக்குதல் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவும் முடியும். அதோடு பிடனுக்கு எதிரான சீனாவுடன் பிஸ்னஸ் டீல் போன்ற விசாரணைகளை பிரதிநிதிகள் சபை தொடங்கி வைக்க முடியும். மொத்தத்தில் 2024 அதிபர் தேர்தலில் இது மிகப்பெரிய அழுத்தத்தை அதிபர் பிடனுக்கு கொடுக்கும். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+