திராவிட மாடலை உலக நாடுகள் பின்பற்றும் நாள் தொலைவில் இல்லை! ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? -வைகோ பூடகம்
சென்னை: திராவிட மாடல் ஆட்சியை உலக நாடுகளின் அரசுகள் பின்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வைகோ தயாராக இருக்கிறார் எனப் பொருள் கொண்டு அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான வைகோ பதிவின் விவரம் வருமாறு;

ஜனநாயக முறைப்படி
''ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.''

திராவிட மாடல்
''தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வழியில் சின்னஞ் சிறு பிராயம் முதல் திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கி, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.''

இதயபூர்வமான வாழ்த்து
''அவர்கள் மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.

பிரதமர் வேட்பாளர்
இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டிருப்பது தான். இதன் மூலம் வைகோ என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தால், ஸ்டாலினை 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புவதை வைகோ சூசகமாக உணர்த்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications