உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல்
சென்னை: உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை என மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 96.
வயது முதிர்வு உள்பட சில காரணங்களால் அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஓராண்டாக அவருக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பொது நிகழ்ச்சியை தவிர்த்து வந்த அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார்.

உலக தலைவர்கள் அஞ்சலி
மகாராணி 2ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் அரச குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் உலக தலைவர்கள், மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மகாராணி எலிசபெத் மறைவால் தற்போது இடைக்கால மன்னராக எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் செயல்பட்டு வருகிறார்.

நாளை இந்தியாவில் துக்க நாள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் செப்டம்பர் 11ம் தேதி ஒருநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை அனைத்து கட்டிடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் மேலும் அன்றைய தினம் அதிகாரபூர்வ அரசு விழா எதுவும் இருக்காது.

வைரமுத்து இரங்கல்
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பிரிட்டன் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛எழுபது ஆண்டுகள் அரசாண்ட முதல் அரசி. 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவப்பணி செய்த முதல் அரண்மனைப் பெண். அரசி எனில் தானே என உலகை உணரவைத்த முதல் ராணி. உங்களோடு கை குலுக்கியது என் உள்ளங்கைப் பெருமை. உங்கள் புகழை காலம் சுமந்து செல்லும்'' என தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் இரங்கல்
முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் பிரிட்டன் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், ‛‛பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்கள் நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்த இரண்டாவது எலிசபெத்தின் முடிவுக்கு வந்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் பொது வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்'' என தெரிவித்து இருந்தார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications