EB ஆபீஸை அதிரவைத்த வைஷாலி.. இறங்கி அடித்த மின்வாரியம்.. ஆதாரத்துடன் மீண்டும் வந்த யூடியூப் தம்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் தம்பதி சத்தியதேவ் மற்றும் வைஷாலி வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று, மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தம்பதி இருவரும் இப்போது மீண்டும் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்படியென்ன சொல்லியிருக்கிறார் வைஷாலி அந்த வீடியோவில்?

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான விவாதம் மின் கட்டண உயர்வு தான்!

Vaishali Sathyadev EB Bill Electricity Bill TANGEDCO YouTuber Couple

யூடியூபர் தம்பதி

"கடந்த 3 மாசமாகவே மக்களுக்கு கரண்ட் பில் எகிறிக் கொண்டு போகிறது, எனக்கும் அதே நிலைமைதான் வந்துள்ளது" என்று நடிகையும் பிரபல யூடியூபருமான வைஷாலி தனது கணவர் சத்தியதேவுடன் இணைந்து 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒட்டுமொத்த இணையதளத்தையும் சூடேற்றி விட்டது.

குறிப்பாக, வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும்போது எழும் திடீர் கட்டண உயர்வு, நடுத்தர குடும்பங்களின் மாத வரவு செலவுத் திட்டத்தையே தலைகீழாக புரட்டிப் போடுகிறது என்பதை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினர் இந்த யூடியூப் தம்பதி. இந்த வீடியோ வெளியான அடுத்த நிமிடமே, இணையத்தில் வேகமாக பரவி, பெரும் பரபரப்பையும், புயலையும் அரசியல் களத்தில் கிளப்பியது.

மின்சார வாரியம் விளக்கம்

ஆனால், இதுதொடர்பாக சோஷியல் மீடியாவில் கிளம்பிய குற்றச்சாட்டுகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உடனடியாக விளக்கம் ஒன்றை தந்தது..

அதில், "மாநிலத்தில் மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஜூலை மாதம் வரை கொளுத்திய கடுமையான கோடை வெயில் காரணமாகவே வீடுகளில் மின் நுகர்வு அதிகரித்து கட்டணம் உயர்ந்துள்ளது" என்று மின்சார வாரியம் தெளிவுபடுத்தியது.

100, 200 யூனிட் இலவசம்

அதுமட்டுமல்ல, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஸ்பெஷல் ஆய்வுகளில், 3.43 லட்சம் மின் இணைப்புகள் நேரடியாக பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் வெறும் 0.75 சதவீதம் இணைப்புகளில் மட்டுமே மீட்டர் வாசிப்பு மற்றும் கணக்கீட்டு தவறுகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்தது.

100 மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோர்களும் ஒரு பைசா கூட கட்டணமில்லாமல் பயனடைந்துள்ளனர் என்பதையம் சுட்டிக்காட்டிய மின்சார வாரியம், பொதுமக்கள் கட்டணத்தில் சந்தேகம் இருந்தால் 9498794987 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது எக்ஸ் தளம் மூலம் தொடர்பு கொண்டு உடனடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்தது.

வைஷாலி தம்பதி விளக்க வீடியோ

மின்சார வாரியத்தின் இந்த நீண்ட விளக்க அறிவிப்பையடுத்து, தங்களுக்கு எழுந்த அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க யூடியூபர் தம்பதி சத்தியதேவ் - வைஷாலி மீண்டும் ஒரு புதிய விளக்க வீடியோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துள்ளனர்.

அதில், "நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களும் கிடையாது" என்று அழுத்தமாக கூறி, தங்களுக்கு வந்த அதிகாரப்பூர்வ மின் கட்டண ரசீதுகள் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் வீடியோவில் நேரடியாகக் காண்பித்துள்ளனர்.

Vaishali Sathyadev EB Bill Electricity Bill TANGEDCO YouTuber Couple

கரண்ட் பில் ஆதாரங்களுடன் விளக்கம்

தாங்கள் வெளியிட்ட பதிவானது நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலையும், மின் கட்டணத்தால் ஏற்படும் பொருளாதார சுமையையும் வெளிப்படுத்தும் ஒரு சாதாரணக் கருத்தே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது அரசாங்கத்தையோ குறிவைத்து இயக்கப்பட்ட அரசியல் சதி அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் வகையில் அவர்கள் இப்போது வெளியிட்டுள்ள இந்த புதிய விளக்க வீடியோவும் இணையத்தில் செம வைரலாக பரவி கொண்டிருக்கிறது.. இந்த விளக்க வீடியோவுக்கும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+