பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. கரப்பான் பூச்சியை ஆதரிப்பவரும் தேச விரோதி! அண்ணாமலையை சாடிய வானதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசை கேள்வி எழுப்பியும், அக்கட்சியை விமர்சித்தும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை. இதை அடுத்து பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை தேசியவாதிகள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் என கூறியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் என வரிசையாக பல லட்சம் கோடி ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்தன.

Vanathi Srinivasan

இந்த ஊழல்களை மறைக்க அன்றைய காங்கிரஸ் அரசு முயன்ற போதிலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராஜா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் பதவி விலகி, சிறை செல்ல நேரிட்டது.

வானதி சீனிவாசன்

இந்தியாவை உலுக்கிய, இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இந்த மாபெரும் ஊழல்களைக் கண்டித்து 2011ம் ஆண்டு காந்தியவாதி அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பற்றிக் கொண்டது. அப்போது டெல்லி ராம் லீலா மைதானத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தை, காவல்துறையினரையும், சிறப்பு படையினரையும் பயன்படுத்தி காங்கிரஸ் அரசு அடித்து விரட்டியது. இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

நரேந்திர மோடி

காங்கிரஸ் அரசின் இந்த அரஜாகப் போக்கையும், இப்போது மத்திய பாஜக அரசை கலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் வன்முறை போராட்டத்தையும் ஒப்பிட்டு சிலர் பேச தொடங்கியுள்ளனர். இதைவிட அபத்தம் இருக்கவே முடியாது. பாஜகவால், பிரதமர் நரேந்திர மோடியால் அரசியலில் அடையாளம் பெற்ற சிலர், இப்போது பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்த்தால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

2014 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. கொரோனா பேரிடர், ரஷ்யா - உக்ரைன் போர், மேற்காசியப் போரால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால், உலகமே பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை தனது நிர்வாகத் திறனால், அரசியல் சாணக்கியத்தனத்தால், உலக நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவால் காத்து வருகிறார் பிரதமர் மோடி.

ஊழல் குற்றச்சாட்டு

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாததால்தான், தொழில்நுட்ப வளர்ச்சியால், நீட் தேர்வில் நடந்த சில குளறுபடிகளை வைத்து போராட்டம் நடத்தினார். அப்போதும் கூட மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத்திய கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தார் பிரதமர் மோடி.

தேர்தல் ஆணையம்

சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் SIR வாயிலாக 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்ற பொய்யைக் கூறி, மாநில அரசுகள் நடத்திய SIRஐ தேர்தல் ஆணையம் நடத்தியதாகக் கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கரப்பான் பூச்சி போர்வையில் போராடி வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். பெண் காவலர்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். இதையெல்லாம் கண்டிக்க மனம் இல்லாதவர்கள் இப்போது பிரதமர் மோடியை குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளனர்.

கரப்பான் பூச்சி

பங்களாதேஷ், நேபாளம் போல, இந்தியாவிலும் வன்முறையை தூண்டிவிட்டு, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில்தான் கரப்பான் பூச்சி பெயரில் போராடுகின்றனர் என்பதை நாட்டின் கடைக்கோடியில் உள்ள இந்தியர்களும் புரிந்து கொண்டு விட்டனர். கரப்பான் பூச்சியின் பெயரில் நடக்கும் போராட்டங்கள், வெளிநாட்டு நிதி உதவியுடன் நடக்கிறது என அமெரிக்காவின் பிரபல பாடகி மேரி மில்பென் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதை சொன்னால், அடிக்கடி வெளிநாட்டு பயணம் சென்று, அதன்பின் அரசியல் முடிவெடுப்பவர்களுக்கு கோபம் வருகிறது.

தேச விரோதிகள்

பாஜகவால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பாஜகவிலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பாஜக தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள். யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+