சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய்பீம் படத்திற்கு எந்த வித விருதும் வழங்கக் கூடாது.. மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு எந்தவித பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் விருதையும் வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தை மத்திய தகவல் மற்று்ம ஒலிபரப்புத் துறை அமைச்சகம், அந்த அமைச்சகத்தின் செயலாளர், மற்றும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதை வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சார்பில் பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே பாலு அனுப்பியுள்ளார்.

கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்

சமூகத்தின் காட்சிகள்

சமூகத்தின் காட்சிகள்

அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான அவதூறான காட்சிகளும், தகவல்களும், வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதனால் மக்களிடையே வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டுகிறது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

எனவே ஜெய்பீம் படத்திற்கு எந்த வித பாராட்டுகளையோ, அங்கீகாரத்தையோ விருதையோ மத்திய அரசு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யக் கூடாது என அந்த கடிதத்தில் வன்னியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாக வன்னியர் சங்கம் ஆட்சேபம் தெரிவித்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. எனினும் அந்த படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக நடிகர் சூர்யாவிடம் ரூ 5 கோடி கேட்டு வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா

சூர்யா

இந்த நிலையில் பாமக நிர்வாகி ஒருவர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ 1 லட்சம் பரிசு தருவதாக கூறியதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது போல் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் கொடுத்துள்ளது.

English summary
Vanniyar Sangam wrote letter to Centre about Jai bhim Vanniyar Sangam wrote letter to Centre about Jai bhim for not considering to appreciate or recognition for the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X