மதுராந்தகம் தொகுதியில் திருமாவளவன் இன்று நடத்த இருந்த தேர்தல் பரப்புரை ரத்து.. டெல்லிக்கு பயணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு ஆதரவாக விசிக சார்பில் இன்று நடத்தப்பட இருந்த பிரச்சார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்வதால், பரப்புரையை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் தவெகவுக்கு மிக முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்துள்ளது.

VCK Cancels Maduranthakam Campaign Meeting in Support of TVK as Thirumavalavan Heads to Delhi

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது திமுக. ஆனால், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணைதிருக்கின்றன. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐஎம் மற்றும் சிபிஐ தனியாக இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளன. மதுராந்தகத்தில் சிபிஐஎம், தாராபுரத்தில் சிபிஐ போட்டியிடுகின்றன.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரு தொகுதிகளிலும் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆனால், இன்றைய தினம், தேர்தல் ஆணையர் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் எஸ்.ஐ.ஆர் குளறுபடிகள் தொடர்பாக இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவதால், திருமாவளவன் அதில் கலந்துகொள்ளச் செல்கிறார். இதனால், இன்று அவர் மதுராந்தகத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு பதிலாக நாளை பிரச்சாரம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகத்தில் செப்டம்பர் 30 அன்று விசிக சார்பில் தவெக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே நாளில் 'இந்தியா கூட்டணி' யின் கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்குச் செல்ல வேண்டியுள்ளதால் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தைத் திட்டமிட்டவாறு நடத்திட இயலாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே, அக்டோபர்-1 அன்று 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+