திமுக அலுவலகத்திற்குள் புகுந்து விசிக நிர்வாகி வெட்டிக் கொலை.. சென்னையில் பட்டப்பகலில் கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த திருநீர்மலையைச் சேர்ந்த விசிக பிரமுகர் ஆறுமுகத்தை ஒரு மர்ம கும்பல் இன்று பட்டப் பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் என்ற மைனா குட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime

இன்று, திருநீர்மலை அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் அன்பழகன். அப்போது ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அன்பழகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்கள் திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் என்கிற மைனா குட்டு மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+