தேசதுரோக குற்றமிழைத்த மத்திய அரசு, பிரதமர் பதவி விலக வேண்டும் -அறிக்கையில் அனல் காட்டிய திருமாவளவன்
சென்னை : பெகாசஸ் உளவு செயலியை பிரதமர் நரேந்திர மோடி அரசு வாங்கியது அம்பலமாகி உள்ள நிலையில், தேசத்துரோக குற்றமிழைத்த பிரதமர் மோடி பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும், மத்திய அரசின் மோசடியை கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், பல பிரபலங்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அரசு இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை விலை கொடுத்து வாங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

திருமாவளவன் அறிக்கை
இதற்கு இந்திய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில தேசத்துரோக குற்றமிழைத்த பிரதமர் மோடி பதவியிலிருந்து விலக வேண்டும் என விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியு யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது எனவும்,, உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளதாகவும், இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம்
மோடி அரசு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து எவ்வளவு செயலியை வாங்கியிருக்கிறது. 2017ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த உறவு செயலி வாங்கப்பட்டிருக்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், இதற்கான தொகை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கழகம் என்ற அமைப்பின் மூலமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் 10 போன்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் உளவு செயலிக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்து உள்ளது அதாவது இந்திய மதிப்பில் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ள திருமாவளவன் பிரதமர் மோடி அரசு சுமார் 300 கோடி ரூபாய்க்கு இந்த உளவு செயலிகளை வாங்கி இருக்கிறது எனவும், அதன் மூலம் சுமார் 600 போன்களை அது உளவு பார்த்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

பிரதமரே பொறுப்பு
மோடி அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து 300 கோடி ரூபாயை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என்ற அமைப்பின் மூலமாக இஸ்ரேலுக்கு அனுப்பி இருப்பது நிரூபணமாகி உள்ள நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் இனி மேல் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத அளவுக்கு கையும் களவுமாக மோடி அரசு பிடி பட்டு விட்டது எனவும், இந்த தேச துரோக செயல் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரும் பொய்யான தகவல்களை கூறியுள்ளதாகவும் இதற்கெல்லாம் பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பதவி விலக வேண்டும்
அன்னிய நாட்டு உளவு செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றியது சட்டவிரோதம் மட்டுமல்ல தேச துரோகம் ஆகும் என குறிப்பிட்டுள்ள திருமாவளவன். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் இந்திய பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும் எனவும். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமியற்றி பல மாதங்கள் ஆன பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், பெகாசஸ் மூலம் மோடி அரசு செய்த அதே துரோகத்தை கண்டும் காணாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட உள்ள குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தனது அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications