காங்கிரஸ் போனதால்தான்.. நாங்களும் போனோம்! ஆனா திமுக எங்களை மட்டும் டார்கெட் செய்யுது! - திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதால் தொடர்ச்சியான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்ததாகவும், காங்கிரஸ் வெளியேறியதை தொடர்ந்துதான்.. நாங்களும் வெளியேறினோம்.. ஆனால் திமுக எங்களை குறி வைத்து விமர்சனங்களை தீவிரப்படுத்துகிறது என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்னர் வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தவெக பக்கம் தாவின. ஆனால், இந்த கட்சித் தாவலுக்காக விசிக மீதுதான் திமுக விமர்சனங்களை தீவிரப்படுத்தியிருக்கிறது என்று திருமாவளவன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Thirumavalavan

திருமாவளவன் பேசியதாவது, "காங்கிரஸ் வெளியேறியதால்தான் அடுத்தடுத்து.. இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விசிக வெளியேறும் நிலை உருவானது. காங்கிரஸ் வெளியேறி 3-4 நாட்களுக்கு பிறகுதான் நம்முடைய நிலைப்பாட்டை அறிவிக்கிறோம். 10 நாட்கள் கழித்துதான் நம்முடைய அமைச்சரவை குறித்த நிலைப்பாட்டை சொன்னோம்.

ஆனால், திமுக.. விடுதலை சிறுத்தைகள் குறித்து விமர்சனங்களை தீவிரப்படுத்துகிறது. எங்களிலிருந்து ஆட்களை தூக்க முயற்சிக்கிறது. திமுக மட்டுமல்ல.. கட்சி சாராத யூடியூபர்ஸ்.. இவர்கள் யாருக்கெல்லாமோ வேலை செய்கிறார்கள். யாருக்கு வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது. இவர்களும் முயற்சிக்கிறார்கள்.

நாங்கள் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தோதம்.. தேர்தலை சந்தித்தோம், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.. தவெக அழைப்பு விடுத்தது.. முதலில் தயங்கினோம், பின்னர் போய் சேர்ந்துக்கொண்டோம். எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த நிமிடம் வரை விசிகவை குறிவைத்து விமர்சித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கும்பல். இதற்கு காரணம், தலித்துகள் சினிமா மோகம் கொண்டவர்கள் என்று குறைத்து மதிப்பிடுவது, இரண்டாவது தனித்துவத்தோடு வலிமையோடு நிற்கிற திருமாவளவன் என்கிற தலைமைத்துவத்தை நீர்த்துப்போக வைப்பது.. சிதைத்து போக வைப்பது.

திருமாவளவன் ஒன்றுமே இல்லை. அதெல்லாம் ஒரு காலம்.. மாற்றி மாற்றி பேசுகிறார். குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். முன்னால் ஒன்று பேசுகிறார்.. பின்னால் ஒன்று பேசுகிறார் என்று சொல்வது.

இப்படி செய்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் தலித்துகள் மட்டுமல்லாது.. தலித் அல்லாத சமூகங்கள் விசிக மீதும் திருமாவளவனின் தலைமைத்துவத்தின் மீதும் நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். அதை சிதைக்க வேண்டும் என்கிற சூழ்ச்சிதான் இது" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+