வீரமணி புழலில் ரகசியம்.. தொழிலதிபர் பிரகாஷ் சிக்கியது எப்படி? 3 வங்கி கணக்கில் ரூ. 24 கோடி முடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. சிறுமிகள் தொடர்பான வழக்குகள் ஒருபக்கம், போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் மறுபக்கம் என பரபரப்பு நீடிக்கிறது. இப்போது தொழிலதிபர் பிரகாஷின் 3 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.24 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.. அப்படி என்ன தொடர்பு இந்த பிரகாஷுக்கு? 3 கிலோ தங்க நகைகள் விவகாரம் என்ன?

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பாலியல் வன்கொடுமை புகார்கள், தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு புகார் என 3 புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Veeramani Case Puzhal Confession Prakash Case 24

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் வீரமணியை 4வது வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பத்மா, வீரமணியை வரும் அக்டோபர் 29-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறையிலேயே விசாரணை

இதற்கிடையே, வீரமணி மீது இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரிடம் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை புழல் சிறையிலேயே வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வீரமணியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணமாக சிறையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் விசாரணையின்போது அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

இன்று 2வது நாளாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் வீரமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? யார் யாரிடம் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும் இன்று மாலை வீரமணியை மீண்டும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, புழல் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கோடிக்கணக்கில் லஞ்சம்?

இந்த வழக்கில் இன்னொரு ஷாக் தகவலும் வெளியாகியுள்ளது. தன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருக்க, முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு வீரமணி கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 3 கிலோ தங்க நகைக்கட்டிகளையும் வீரமணி வாங்கி, அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசாக கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பணத்தையும் தங்க நகைகளையும் யார் யாரிடம் கொடுத்தார்கள்? இதில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

3 வங்கிக் கணக்குகள் முடக்கம்

இந்த விவகாரத்தில் தொழிலதிபர் பிரகாஷின் பெயரும் அடிபடுகிறது. வீரமணி, பிரகாஷின் வங்கிக் கணக்குக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் கண்ணையாவின் மகன் தான் பிரகாஷ்.. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது... இதையடுத்து, பிரகாஷுக்கு சொந்தமான 3 வங்கிக் கணக்குகளை சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அந்தக் கணக்குகளில் இருந்த ரூ.24 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆக, வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவது ஒருபுறம்.. லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார், 3 கிலோ தங்க நகைகள், பிரகாஷின் வங்கிக் கணக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.24 கோடி என இந்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தப் பணம் யாருக்கெல்லாம் சென்றது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது இனிமேல்தான் விசாரணையில் தெரியவரும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+