ஓபிஎஸின் அடுத்த “ஆக்ஷன்”.. பிரபலத்தின் வாரிசுக்கு முக்கிய பதவி! நடிகர் வேல ராமமூர்த்தி மகனா இது?
சென்னை: அதிமுக மாநில இளைஞரணி செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தால் பிரபல சினிமா நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மகன் ராஜேஷ் ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்போக்கு நீடித்து வருகிறது. ஜூலை மாதம் எடப்பாடி தரப்பு நடத்திய பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கும் அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் வழக்கு
எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தவர்களை ஏற்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதேபோல் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு
இதனால் அதிமுக பதவிகள் ஓ.பன்னீர்செல்வம் வசம் மீண்டும் வந்தன. ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டதும் செல்லாமல் போனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை செல்லும் என்றும் உத்தரவிட்டதால் மீண்டும் ஓபிஎஸ் நீக்கம் செல்லுபடியானது.

சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால், சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதே இருக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது.

காய் நகர்த்தும் ஈபிஎஸ், ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடர்ந்து அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை மாற்றியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓபிஎஸ் அறிவிப்பு
இந்த நிலையில் நேற்று அதிமுகவின் புதிய தலைமைக்கழக நிர்வாகிகள் பட்டியலை ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதில், அதிமுக அமைப்புச் செயலாளர்களாக மு. கவிதா இராசேந்திரன், S.D. காமராஜ், PVK பிரபு, P.H. சாகுல் அமீது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

தலைமைக்குழு நிர்வாகிகள்
அதிமுக மீனவரணி செயலாளராக ஜெ. கோசுமணி, அதிமுக இளைஞரணிச் செயலாளராக V.R. ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் G. மோகன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக துறையூர் கே. கணேஷ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வேல ராமமூர்த்தி மகன்
அதிமுக மீனவரணி இணைச் செயலாளராக A.C.லோகு, அதிமுக் மீனவரணி துணைச் செயலாளர் G.ஜெயராமன் ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது ராஜ்மோகன் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மகன் ஆவார்.

வேல ராமமூர்த்தி பதிவு
இதனை பேஸ்புக்கில் பதிவிட்டு வேல ராமமூர்த்தி நன்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "எனது மகன் V.R.ராஜ்மோகனை அ.இ.அ.தி.மு.கழக மாநில இளைஞரணி செயலாளர் ஆக நியமனம் செய்த கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்











Click it and Unblock the Notifications