மதுரை, திருச்சி, சேலம், திருத்தணியில் இன்று அதிக வெப்பம்.. சென்னையில் சற்று குறைவு
சென்னை: மதுரை, திருச்சி, சேலம், திருத்தணியில் இன்று அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்தது. அது போல் சென்னையில் இன்று வெப்பம் குறைந்த அளவில் இருந்தது.
Recommended Video
தமிழகத்தில் கோடைக் காலம் முதலே திருச்சி, திருவண்ணாமலை, திருத்தணி, சென்னை ஆகிய பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வந்தது. கடந்த சில தினங்களாக அதாவது அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெப்பநிலை சற்று அதிகமாகவே இருக்கிறது.
அக்னி நட்சத்திரம் நாளை முடிவடையவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை குறைவாகவே உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி
சென்னையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ளது. நேற்றைய தினம் 99 டிகிரியாக இருந்த நிலையில் இது சற்று குறைந்த வெப்பநிலையாக உள்ளது. கோவையில் 99 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடலூரில் 95 டிகிரி பாரன்ஹீட்டும் தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

பாரன்ஹீட்
கன்னியாகுமரியில் 92 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. தென் மாவட்டமான இங்கு வெப்பச்சலனத்தால் அதிக மழை பெய்யும் என தெரிகிறது. கரூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி கொளுத்துகிறது. அது போல் நாகையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

வேலூர்
நாமக்கல்லில் 103 டிகிரி வெப்பமும் சேலத்தில் 102 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. திருச்சி, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக உள்ளது. நேற்று வரை 106 டிகிரி வெயில் கொளுத்திய வேலூரில் 102 டிகிரியாக உள்ளது. இது அந்த மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை
திருத்தணி, திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே வெயில் அதிகமாக உள்ளது. சென்னையில் இன்று குறைந்துள்ளது. காலை முதலே வானம் மூடி மூடி திறக்கிறது. அப்படியே வெயில் வந்தாலும் அது தகிப்பது போல் இல்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என கூறியுள்ளதால் அதன் தாக்கம் காரணமாக வெயில் குறைந்திருக்கலாம் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications