“காப்பாத்துங்க” - கதறும் தமிழர்கள்.. “மியான்மரில்” சித்திரவதை! காரணம் “வேலையின்மை” - வேல்முருகன்
சென்னை: மியான்மர் நாட்டில் கடத்தி செல்லப்பட்டு துன்புறுத்தப்படும் தமிழக இளைஞர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி, தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டிற்கு மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கடத்தப்பட்ட தமிழர்கள், மியான்மார் நாட்டில் உள்ள மியாவாடி என்கிற எல்லைப் பகுதியில் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தாய்லாந்து எல்லை மூலம் ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வேலையின்மை
இந்தியாவில் வேலையின்மையை எதிர்க்கொண்டு வரும் நன்கு படித்த இளைஞர்கள், கல்விக் கடனை செலுத்தவும், குடும்பத்தை காப்பாற்றவும் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். பொறியியல் படித்த மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயின்ற மாணவர்கள், துப்புரவு பணிக்கு விண்ணப்பிப்பதும், சென்னை போன்ற பெரு நகரங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

புரோக்கர்கள்
இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளிநாட்டில் வேலை தருவதாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்யும் புரோக்கர்கள், ஏஜெண்ட்டுகள், தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்களை, நல்ல வேலை, நல்ல ஊதியம் வாங்கி தருவதாக கூறி, தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சித்திரவதை
ஆனால், அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத பணிகளைச் செய்ய நிர்ப்பந்தம் செய்து, அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக, தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும், கடுமையாக அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் அறியலாம்.

மீட்க கோரிக்கை
பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோர்களும் தங்கள் கையறு நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பதை ஊடகங்களில் பார்க்கும் போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய இளைஞர்களை பாதுகாப்புடன் மீட்பதோடு, இச்சம்பவத்திற்கு காரணமான புரோக்கர்களையும், ஏஜெண்ட்களையும், கடத்தல் கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications