சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக பக்கம் சாய்கிறதா பாஜக? அடுத்தடுத்து குவியும் பாராட்டு.. வெங்கையாவே வியந்து வாழ்த்தியிருக்காரே!

திமுக நேற்று நடத்திய கூட்டத்திற்கு வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்தாராம்

Google Oneindia Tamil News

சென்னை: "என்ன இதெல்லாம்? வெங்கையா நாயுடுவே திமுகவை வியந்து பாராட்டுகிறாரே.. திமுக பக்கம் சாய்கிறதா பாஜக?" என்ற சலசலப்புதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நம் தமிழக அரசியலுக்கு நிச்சயம் பொருந்தியே வந்துள்ளது.. இனியும் பொருந்தும்.. பாஜக மெல்ல திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக சில தினங்களாகவே அணுமானங்கள் எழுந்தன.

இதற்கு காரணம், இந்தியாவின் பல மாநிலங்களில் வெற்றிகளை குவித்தாலும் தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருப்பதுதான் பாஜகவின் வருந்தத்தக்க நிலைமை.. இதை அமித்ஷா, மோடி முதல் யாராலுமே ஜீரணிக்கவும் முடியவில்லை!

 "மாத்தி யோசி".. பாஜக, காங்.தானா.. திமுக, அதிமுக இப்படி ஒரு முடிவெடுத்தா என்னாகும்.. கலகலக்கும் குமரி

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டது.. திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் சமீபத்தில்தான் உணர்ந்துள்ளது. அதனால்தான் தன் நிலைப்பாட்டையும் மெல்ல மெல்ல மாற்றி கொண்டு வருவதாக தெரிகிறது.

அதிருப்தி

அதிருப்தி

இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், பெருஸ்ஸா எந்த லாபம் இல்லை... பாஜக தலைவர்களுக்கு எந்த மரியாதையும் அதிமுகவில் தரப்படுவதில்லை என்ற வருத்தம் அக்கட்சிக்கு உள்ளது.. வரும் தேர்தலில் 60 சீட்டில் வெல்வோம் என்று முருகன் சொல்லியிருந்தாலும் கூட.. அதெல்லாம் சான்ஸே இல்லை என்பதே அதிமுகவிலிருந்து வரும் நமட்டுச் சிரிப்பாக உள்ளது.

மீட்டிங்

மீட்டிங்

இப்படிப்பட்ட அனுமானங்கள் எழுந்துவரும் நிலையில்தான் மற்றொரு விஷயமும் கவனிக்கும்படியாக உள்ளது.. நேற்று திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்தது.. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இப்படி ஒரு வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங், உலக அரசியல் வரலாற்றிலேயே எந்த கட்சியும் இதுவரை நடத்தியது இல்லை. மற்ற கட்சிகளே இதை வாயை பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்!

பாராட்டு

பாராட்டு

இந்த விஷயத்தை பாஜகவும் உற்றுக் கவனித்தது. காரணம், பாஜக கூட இப்படி நடத்தியதே இல்லை. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. தொழில் நுட்பத்தை மதிநுட்பத்துடன் திமுக பயன்படுத்தியிருப்பது அவரைக் கவர்ந்து உள்ளது. இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன்னுடைய பாராட்டையும், வாழ்த்தையும் அனுப்பினாராம் வெங்கையா நாயுடு!

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.. வெங்கையா நாயுடு இப்படி வாழ்த்து சொன்னது.. சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் துரைமுருகன்- டிஆர் பாலுவுக்கு வாழ்த்துச் சொன்னது என்று அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளை வைத்து பலர் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்குப் போக ஆரம்பித்து விட்டனர். இவையெல்லாம் ஏதாவது ஒன்று நடக்கப் போவதற்கான கட்டியமா ? அல்லது அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.. ஆனாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை யாரும் மறந்து விடவும் கூடாது.

English summary
Venkaiah Naidu greets DMK for holding online General Body meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X