வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 .. இனி வீட்டிலிருந்தே சான்றிதழ்.. இ-சேவை மையங்களின் எதிர்காலம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களுக்கு அரசு சேவை விரைந்து கிடைக்க இ-சேவையில் புதிய தொழில்நுட்பம் வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 என்ற பெயரில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மின் கட்டணம் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் இன்னும் எளிமையாக ஒரே கிளிக்கில் கிடைக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது.

தமிழக அரசு, அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைவதை குறைத்து, இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழ் பெறும் முறை இருக்கிறது . டிஜிட்டல் வழியில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதன் நோக்கம், லஞ்சத்தை குறைப்பது, வெளிப்படைத்தன்மை, எளிதில் அணுகக்கூடிய நிலை போன்றவற்றை நோக்கமாக கொண்டு வழங்கப்படுகிறது. இ சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.

e-service - tamil nadu

இந்த சேவைகளை இன்னும் வேகமாகவும், எளிதாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு "வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0" என்ற புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள் நவம்பர் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் தற்போதைய இ-சேவை தளம் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சேவைகள் குறித்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாடு அரசின் இ-சேவை இணையதளத்தை தற்போது அதிகம் பேர் ஒரே நேரத்தில் லாகின் செய்தால் சர்வர் மெதுவாக செயல்படுவதாகவும், முடங்கிவிடுவதாகவும் ஏராளமான புகார்கள் உள்ளது. வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0-வில் இந்த பிரச்சினை இருக்காது. அதிவேகத்தில் சேவை இனி கிடைக்கும்

பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மின் கட்டணம் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் இன்னும் எளிமையாக ஒரே கிளிக்கில் கிடைத்துவிடும்.
புதிய 2.0 தளம் முழுக்க முழுக்க செல்போன் மூலம் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இனி, கம்ப்யூட்டர் சென்டர் அல்லது இ-சேவை மையங்களை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே செல்போனில் விண்ணப்பிக்க முடியும். ஆதார், தனிப்பட்ட விவரங்கள் ஹேக் ஆகாமல் இருக்க அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் சேர்க்கப்பட உள்ளது. விண்ணப்பத்தின் நிலை என்ன? எப்போது சான்றிதழ் கிடைக்கும்? என்பதை நேரடியாக எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் அறிய முடியும். மொத்தத்தில், கிராமத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனும் அரசு சேவையை வீட்டில் இருந்தே பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 திட்டம் கொண்டு வரப்பட உள்ளது" இவ்வாறு கூறினார்.

செல்போனிலேயே அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்கிற நிலை வந்தால், இ சேவை மையங்களை நடத்துவோரை பாதிக்குமோ என்ன அச்சமும் இருக்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் ஏராளமான சேவைகள் செல்போனிலேயே மேற்கொள்ள முடியும் என்று தான் உள்ளது. செல்போன் இல்லாதவர்கள், செல்போனை பயன்படுத்த தெரியாதவர்கள், சரியான கல்வி அறிவு இல்லாதவர்கள் பலர் இ சேவை மையம் மூலமே விண்ணப்பிக்கிறார்கள். படித்தவர்கள் பலருமே எப்படி விண்ணப்பிபது என்று தெரியாத காரணத்தால் இ சேவை மையத்தில் சேவைகளை பெறுகிறார்கள். எனவே என்னதான் அரசு எளிமையாக்கினாலும் பாமர மக்களுக்கு இ சேவை மையங்கள் தொடர்ந்து சேவை வழங்கும். எனினும் எல்லாமே செல்போனில் மேற்கொள்ள முடியும் என்கிற நிலை வந்தால், இ சேவை மையம் வரவேண்டிய சூழல் சற்றே குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இ சேவை மையங்களை பாதிக்கும் அளவிற்கு இருக்குமா என்பதை "வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0" திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே அறிய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+