ஸ்டைலா.. கெத்தா.. ப்ளூ கலர் கோட், சூட்டில் திருமாவளவன் மாஸ் போட்டோஷூட்.. பல "குறியீடுகள்" இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், லோக்சபா எம்பியுமான தொல்.திருமாவளவன் எடுத்துள்ள புகைப்பட போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின், 58வது பிறந்த தினம் ஆகஸ்ட் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் தான், தனது பிறந்த நாளையொட்டி போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார் தொல்.திருமாவளவன்.

நீல வண்ண தீம்

நீல வண்ண தீம்

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நீலக்கலர் தீம் வைத்துக் கொண்டு இந்த புகைப்பட சூட் நடத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

கோட், சூட் திருமாவளவன்

கோட், சூட் திருமாவளவன்

திருமாவளவனின் பின்னணியில் நீல நிற மட்டும் இடம்பெற்றிருக்கிறது. திருமாவளவன் நீல நிறத்தில் கோட் , சூட், அணிந்து இருக்கிறார். கருப்பு நிறத்தில் ஷூ அணிந்து இருக்கிறார். தனது வழக்கமான கண்ணாடியையும் அவர் அணிந்திருப்பதை படத்தில் பார்க்க முடிகிறது.

பா.ரஞ்சித் பட வசனம்

பா.ரஞ்சித் பட வசனம்

சட்டமேதை அம்பேத்கர் எப்போதும் கோட் சூட்டுடன் காணப்பட்டவர். இயக்குநர் பா.ரஞ்சித் தனது கபாலி என்ற திரைப்படத்தில், கோட் சூட் பற்றி ஒரு டயலாக் வைத்திருப்பார். "நாங்கள் கோட் சூட் போட்டால்.. உங்கள் முன்னால் கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால்.. உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாதுன்னா.. நாங்கள் முன்னுக்கு வருவது தான் பிரச்சனை என்றால்.. நான் முன்னுக்கு வருவேன் டா.. கோட்சூட் போடுவேன் டா.. கால் மேல, கால் போட்டு உட்காருவேன் டா.. ஸ்டைலா, கெத்தா.." என்று கூறுவது போல ஒரு வசனம் வைத்திருப்பார்.

ஸ்டைலா, கெத்தா

ஸ்டைலா, கெத்தா

இப்போது திருமாவளவன் கோட் சூட் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தால் ஸ்டைலா, கெத்தா இருக்கிறது என்று புகழாரம் சூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். அதிலும் பழைய காலத்து தொலைபேசி ஒன்றை மேஜை மீது வைத்து அந்த மேஜைமீது கையில் ஒரு புத்தகத்துடன் திருமாவளவன் ஒரு காலை மேலே போட்டு அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் மாஸ் ரகம்.

 புத்தகத்தில் புத்தர்

புத்தகத்தில் புத்தர்

திருமாவளவன் கையில் வைத்திருக்கும் அந்த புத்தகத்தின் அட்டையில், புத்தர், புகைப்படம் இடம்பெற்றிருப்பது .. பின்னணியில் நீல வண்ணம் இடம் பெற்றிருப்பதும் செம "குறியீடு" என்று சிலாகித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+