தவெகவின் 100வது நாள் ஆட்சி.. சாதனை பட்டியல் ரெடியாக இருக்கணும்.. விஜய் போட்ட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியின் 100 நாட்களில் செய்யப்பட்ட சாதனைகள் தயாரிக்க அனைத்து துறைகளுக்கும் முதல்வர் விஜய்யிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 100 நாள் ஆட்சியை பாராட்டி விளம்பரப் படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை விரைவில் வெளியிட தவெக தலைமை தீவிரமாக இருக்கிறது.

60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை கடந்து தவெக முதல்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருக்கிறது. மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், தற்போது முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருக்கிறது. தற்போது தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை எட்ட இருக்கிறது. இதனால் தவெகவினர் 100வது நாள் ஆட்சியை கொண்டாட இருக்கின்றனர்.

Vijay TVK Aadhav Arjuna

அதுமட்டுமல்லாமல் இந்த 100 நாள் ஆட்சியில் தவெக அரசு செய்த சாதனைகள் அடங்கிய பட்டியலை தயாரிக்க அனைத்து துறைகளின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தவெக கொண்டு வந்த மாற்றம், போட்ட உத்தரவு, எடுத்த நடவடிக்கைகள் என்று எதையும் தவறவிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படை, 200 யூனிட் மின்சாரம், 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூட, அம்மா உணவகங்கள் மறுசீரமைப்பு, விவசாயிகளுக்கு ரூ.134 கோடியில் சிறப்பு தொகுதி, பகுதி அளவு பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை 100வது நாளில் பேசுபொருளாக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தொழில்துறையில் கொண்டு வரப்பட்ட முதலீடுகள், கனிமவளத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பத்திரப்பதிவுத்துறையில் செய்த மாற்றங்கள், லஞ்சத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் மக்கள் முன்னிலையில் கொண்டு செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் தவெகவின் 100 நாள் ஆட்சியை வைத்து விளம்பரப் படங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். இதற்காக திரைத்துறையின் முக்கிய நடிகர்கள், நடிகைகள், பிரபலங்களிடம் பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இதுதொடர்பாக ஒவ்வொன்றாக தவெக தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய்யும் இந்த சாதனைகளை 100வது நாளன்று வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+