82 இடங்களில் வெட்டு போட சொன்ன சென்சார்! ஜனநாயகன் படம் ரிலீஸாகாதது விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாம்!
சென்னை: ஜனநாயகன் படம் வெளியே வராமல் இருப்பதில் விஜய்க்கு அத்தனை சந்தோஷம் என ரோஸ்டர் பிரதர்ஸ் கிரண் ப்ரோஸ் தெரிவித்துள்ளார். படத்தை பார்த்த விஜய், நன்றாக இல்லை என நினைக்கிறாராம் என்று கிரண் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விரும்பி நடித்த படம் எப்படி நன்றாக இல்லாமல் போகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனைகளால் தள்ளிப்போனது. இதுகுறித்து ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு கிரண் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "படத்துல ஆர்மி சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கு. அதுக்கு என்ஓசி வாங்கலன்னு சொல்றாங்க.

மேலும், இந்த படம் ரிலீஸாகாததற்கு திமுக தான் காரணம்னு 80% மக்கள் சொல்றாங்க. ஆனா, தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. இத்தனை நடந்த பிறகும் விஜய் ஏன் அறிக்கை விடவில்லை என பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் அறிக்கை வெளியிடாததற்கு ஓட்டு காரணமாக இருக்கலாம். விஜய், திமுக பத்தி மட்டும் தான் பேசுறாரு. வேற யாரை பத்தியும் பேசல.
தணிக்கை குழு படம் பார்த்ததும் 82 கட் இருக்குன்னு சொன்னாங்க. ஆனா, அவங்க டீமே மும்பை போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. பகவான் கேசரி படத்தோட ரீமேக் தான் இதுன்னு சொல்றாங்க. இந்த படத்தின் அவுட்புட்டை பார்த்த எச்.வினோத்திற்கும் படம் திருப்தியா இல்லாத மாதிரிதான் இருக்கு. விஜய் தெலுங்கு படத்துல இருந்து ஒரு நல்ல கதைய புடிங்கன்னு சொன்னாராம். அதனால்தான் பகவான் கேசரி படத்தை எச்.வினோத் ரீமேக் செய்துள்ளார். "கொலை பண்றதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் வரீங்கன்னு கேக்குறாரு" என்று படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேல் தணிக்கை குழுவையும் தயாரிப்பு குழுவையும் விஜய் ரசிகர்கள் திட்டி வரும் நிலையில் , விஜய்யே படம் ரிலீஸ் ஆகக்கூடாதுன்னு சந்தோஷப்படுறாரு. ஏன்னா, படம் நல்லா இல்லீன்னு அவரே நினைக்கிறாரு. சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு வரச் சொன்னதும் விஜய் குஷியாகிவிட்டார் என கிரண் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் இதில் அரசியல் வசனங்கள் ஏராளமாக உள்ளன. 2.52 நிமிடங்கள் வெளியான டிரெய்லரில் ஏகப்பட்ட வசனங்கள் இருந்தன.
மேலும் இந்த படத்தில் சமூகம் சார்ந்த பழைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். ராணுவம் குறித்து காட்சிகளுக்கு அவர்களிடம் இருந்து அனுமதி வாங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த படம் 380 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம். இதில் விஜய்க்கு மட்டும் ரூ 220 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் எச்.வினோத்திற்கு ரூ 25 கோடியும் அனிருத்திற்கு ரூ 13 கோடியும், பூஜா ஹெக்டே, பாபி தியோலுக்கு தலா ரூ 3 கோடியும் மமிதா பைஜுக்கு ரூ 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஊதியத்திற்காக மட்டும் ரூ 272 கோடி செலவிட்டு 148 நாட்கள் ஷூட்டிங் நடந்ததாம். ஷூட்டிங்கிற்கு ரூ 48 கோடி செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா












Click it and Unblock the Notifications