பாஜக வாக்குகளையும் விஜய் பெறுகிறார்.. திமுகவுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கு.. சொல்கிறார் சுவாமிநாதன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் தவெக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகளை பெறும் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாஜக எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மை சமூக வாக்குகள், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை விஜய் கைப்பற்றுவதாகவும் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட சூழலில், எந்தக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. புதிதாக களத்திற்கு வந்துள்ளதால், தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்ற விவாதம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைக்குமா? அதிமுக ஆட்சி வருமா? தவெக வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Vijay

இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், இந்த தேர்தலில் முதலில் விஜய்க்கு தான் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனென்றால் முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்த விஜய் ஒரு கோடி வாக்குகள் வரை பெறலாம். ஆனால் எளிதாக மக்கள் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கவில்லை என்ற அதிர்ச்சி விஜய்க்கு காத்திருக்கிறது. ஆனால் திமுக, அதிமுக, நாதகவுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

அதில் முதல் கட்சியாக திமுக தான் இருக்கிறது. ஏனென்றால் 2019, 2021 மற்றும் 2024 ஆகிய 3 தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக திமுக சாமானிய மக்களை நெருங்கி இருக்கிறது. அப்படி இருந்தும் விஜய் கணிசமான வாக்குகளை எடுத்துள்ளார். திமுகவின் தொடர் வெற்றிக்கு பாஜக எதிர்ப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது.

ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக, நாதக, தவெக என்று மூன்றாக பிரிகிறதோ, அதுபோல் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக மற்றும் தவெக என்று இரண்டாக பிரிந்துள்ளது. தமிழ்நாட்டில் 82% வாக்குகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தான். சிறுபான்மை வாக்குகள் விஜய் பக்கம் கணிசமாக சென்றிருக்கிறது. அதில் தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய் பக்கம் சென்றிருக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறி இருக்கிறது. அதிமுக பக்கம் செல்ல வேண்டிய வாக்குகள் விஜய்க்கு சென்றுள்ளது. பாஜகவினரும் கூட விஜய்க்கு வாக்களித்துள்ளனர். கன்னியாகுமரி போன்று பாஜக பலமாக இருக்கும் பகுதிகளில், பாஜகவின் வாக்குகளையே விஜய் எடுத்திருக்கிறார்.

விஜய் வெல்லப் போவதில்லை. ஆனால் யார் வெல்வார்கள் என்பதை தவெக தான் முடிவு செய்யப் போகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தவெக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வரை விஜய் பெறுவார். விஜய்யால் குறுகிய காலத்தில் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை, வெறுப்பை உருவாக்கிவிட்டார். அதன் பலனை விஜய் அறுவடை செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+