பள்ளி மாணவியுடன் காதல்..அதிகாலையில் கட்டான வீடியோ கால்! விஜய் மக்கள் நிர்வாகி எடுத்த பகீர் முடிவு!
சென்னை : சென்னை அருகே தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி சிறுமியான காதலியுடன் வீடியோ காலில் பேசிய போது போனை கட் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம், கடப்பேரி அருகே உள்ள புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. லாரி டிரைவராக இருக்கும் இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
திருமணம் ஆகாத இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது தாய் சின்னமாவிடம் மது போதையில் சண்டை போட்டு கொண்டு தாம்பரம் - திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் தங்கி வந்துள்ளார்.

விஜய் ரசிகர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் பனையூரில் நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அது முடியாததால் வாரிசு படம் வெளியாவதையொட்டி போஸ்டர்கள் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திடீர் தற்கொலை
தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கருப்பசாமியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவந்தது. அதாவது வீடியோ கால் பிரச்சனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவி
கருப்புசாமி காதலித்த பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தினமும் இரவு நேரங்களில் கருப்புசாமி அவருடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் அதிகாலை மது போதையில் இருந்த கருப்புசாமி தான் காதலித்து வந்த பள்ளி மாணவியுடன் செல்போனில் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் கேட்டதற்கு பள்ளி மாணவி தான் படித்து முடித்த பின்னர் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

விசாரணை
பின்னர் மாணவியின் தாய் வந்துவிட்டதால் அவர் இணைப்பை துண்டித்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கருப்புசாமிக்கு தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்காததால் இது குறித்து கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியிடம் பள்ளி மாணவி தொடர்பு கொண்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமியின் தாய் சின்னம்மா அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு புடவையால் தூக்கிட்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications