வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு
சென்னை: வேட்புமனுவில் வேட்பாளர்கள் தவறு செய்யகூடாது. அப்படி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், வெற்றியே பறிபோக வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும், விஜய் தனது வேட்புமனுவில் மீண்டும் மீண்டும் தவறு செய்திருக்கிறார்.
ஏற்கெனவெ சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதில் வயது குறித்த விவரங்கள் தவறாக இருந்தன. இதனையடுத்து இன்று மீண்டும் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.இருப்பினும் அதிலும் குழப்பம் நீடிக்கிறது.

என்ன நடந்தது?
விஜய் வழங்கிய பிரமாண பத்திரத்தின் ஆவணங்களில் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பில் பெரும் மாற்றம் உள்ளது. சென்னை வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 410,58,82,196/- (சுமார் 410 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மனுவில் இதில் மொத்த மதிப்பு ரூ. 404,58,57,196/- (சுமார் 404 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு விவரங்கள்
அதேபோல பெரம்பூர் மனுவில் துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 15,57,29,421/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி பத்திரத்தில், துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 15,51,79,421/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5.5 லட்சம் ரூபாய் வித்தியாசம் உள்ளது.
சங்கீதாவின் சொத்து
வெள்ளி பொருட்கள் விஷயத்திலும் கணக்கு தவறாக காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, சென்னை மனுவில் மனைவி சங்கீதாவிடம் உள்ள வெள்ளிப் பொருட்கள் ரூ. 15,00,000/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மனுவில், 2 கிலோ, ரூ. 4,75,000/- எனக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல இன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2 கிலோ, ரூ. 25,000/- என மிகக் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. இது விஜய்யின் மனு நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை! விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?











Click it and Unblock the Notifications