100 சீட் + துணை முதல்வர் பதவி.. துணிச்சலாக விஜய் கொடுத்த ஆஃபர்.. ஆடிப்போன டெல்லி காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்தால், 100 சட்டமன்றத் தொகுதிகள், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்மொழிந்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் சென்னை இல்லத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி உடனான இந்த ரகசியப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸின் தொழில் வல்லுநர் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறைக்குத் தலைமை தாங்கும் சக்ரவர்த்தி, விஜய்யைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், இந்த சந்திப்பின் விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

காங்கிரஸின் உள்வட்டாரங்களின்படி, இம்முன்மொழிவு தமிழக வெற்றிக் கழகம் அதிகாரம் பகிர்வுக்குத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. அதாவது உங்களுக்கு தேவை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அதோடு உங்களுக்கு தேவை அதிக சீட்டுகள். நாங்கள் 100 சீட் தருகிறோம். அதோடு அமைச்சரவையிலும் இடம் தருகிறோம். துணை முதல்வர் பதவியும் தருகிறோம் என்று விஜய் பிரவீன் சக்கரவர்த்தியிடம் கூறி உள்ளாராம்.

Vijay s TVK Offers Congress 100 Seats and Deputy CM Post in Pre-2026 Poll Push

திமுக கவலை

இச்சந்திப்பு, காங்கிரஸின் தமிழக பிரிவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவை கவலைக்குள்ளாக்கியது. பிரவீன் சக்ரவர்த்தி ராகுல் காந்திக்கு நெருக்கம். அப்படி இருக்க ராகுல் காந்திக்கு தெரியாமலா இவர் சந்திப்பை நடத்தி இருப்பார்? ராகுல் காந்திக்கு தெரியாமலா பிரவீன் - விஜய் சந்திப்பு நடந்து இருக்கும்.. வாய்ப்பே இல்லையே என்று திமுக கவலையில் உள்ளதாம்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் மேலிடம், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இது, தற்போதைய கூட்டணியில் தங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.

காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திடம் (திமுக) காங்கிரஸ் கட்சி உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கணிசமான பிரதிநிதித்துவம் கோரும் காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த புதன்கிழமை, திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். 75 சட்டமன்றத் தொகுதிகள்; அல்லது 40 தொகுதிகளுடன் அமைச்சரவைப் பதவிகள்; அல்லது 30 தொகுதிகளுடன் ஐந்து மாநிலங்களவை இடங்கள்.

திமுக - காங்கிரஸ் பேச்சு

இக்கோரிக்கை, தமிழக அரசியலில் நிலைபெறவும், திமுக கூட்டணியின் மூலம் தனது இருப்பைப் பலப்படுத்தவும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. 75 தொகுதிகள் காங்கிரஸை முக்கிய காட்சியாகும் அல்லது 40 தொகுதிகள் மற்றும் அமைச்சரவைப் பதவிகள் சட்டமன்ற, நிர்வாக அதிகாரங்களைச் சமநிலைப்படுத்தும். திமுக பெரிய எண்ணிக்கையை மறுக்கும் பட்சத்தில், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களவை இடங்கள் மாற்றுத் திட்டமாகும்.

திமுக தலைவர்கள் இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் திமுக தலைவர்கள் யாருக்கும் மேற்கண்ட 3 பார்முலாவிலும் விருப்பம் இல்லை. 75 தொகுதிகள் வழங்குவது காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று சிலர் கருத, அதிக இடம் கொடுத்தால் நாம் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று நினைக்கிறார்கள். இக்கோரிக்கைகள், கூட்டணி இத்தகைய அழுத்தத்தில் நீடிக்குமா என்ற விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+