பிரதமராகும் விஜய்? ராகுலை காாந்தியை கண்டுகொள்ளாத தவெக? கூலாக காங்கிரஸ் கொடுத்த விளக்கம்! அடடே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தாரகை கத்பர்ட் இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு தான் முதல்வர் விஜய் ஆதரவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் பதவிக்கான தலைவர்களில் விஜய் மூன்றாவது இடத்திருந்தார். மேலும், தவெக தரப்பில் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் கருத்துகள் வருகிறது. தவெக அமைச்சர்கள் நிர்வாகிகள் என பலரும் விஜய் பிரதமர் வேட்பாளர் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

Vijay Rahul Gandhi Vijay Supports Rahul Gandh

காங்கிரஸ்

மறுபுறம் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை விஜய் ஆதரிக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் எச்சரித்தது. குறிப்பாக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஆதரிக்கவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என நேரடியாகவே கூறியிருந்தார்.

தாரகை கத்பர்ட் விளக்கம்

இவை எல்லாம் குறித்து தாரகை கத்பர்ட் கூறுகையில், "விஜய் பிரதமராக வேண்டும் என்பதை தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு ஆர்வத்தில் சொல்லி வருகிறார்களே தவிர, இது அக்கட்சியின் தலைமையின் நிலைப்பாடு இல்லை. முதல்வர் விஜய்யை பொறுத்தவரை அவர் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். அதன்படியே அவர் செயல்பட்டு வருகிறார்" என்றார்.

மேலும், விஜய்க்கும் ராகுல் காந்திக்கும் இடையே நெருக்கமான நல்லுறவு இருப்பதாகவும் தாரகை கத்பர்ட் குறிப்பிட்டார். சென்னையில் நடைபெற்ற விஜயின் பதவியேற்பு விழாவுக்கு ராகுல் காந்தி நேரில் வந்து கலந்து கொண்டதையும் அவர் குறிப்பிட்டார். அப்போது விஜய், ராகுல் காந்தியை வெளிப்படையாக தனது "சகோதரர்" எனக் குறிப்பிட்டார். அதேபோல் தவெக அரசுக்கு ராகுல் காந்தியும் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து பேசிய தாரகை கத்பர்ட்,"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளக்க் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தே வருகிறது. தவெகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் செயல்படவில்லை. காங்கிரஸ் ஒரு ஜனநாயக மற்றும் தன்னாட்சி கொண்ட கட்சி.

தேசியளவில் பார்த்தாலும் கூட ராகுல் காந்திக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களிடையே ராகுல் காந்திக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதை பார்த்து பாஜக பதறுகிறது. இந்த அச்சம் காரணமாகவே ராகுல் காந்தி மீது பல்வேறு பொய் வழக்குகளை போடுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து 2029ஆம் ஆண்டு ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராக வருவார்" என்றும் அவர் கூறினார்.

இருக்கை சர்ச்சை

நேற்றைய தினம் சட்டசபையில் தாரகை கத்பர்ட் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். பிரதமர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை சில காலமாகவே இருக்கும் நிலையில், இதன் காரணமாகவே தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே அது தொடர்பாகவும் தாரகை கத்பர்ட் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், "இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதனால் தான் இருக்கை மாற வேண்டி இருந்தது. இது வழக்கமான நடவடிக்கை. இதில் அரசியல் ரீதியாக எதுவுமில்லை" என்றார். தாரகை கத்பர்ட் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் சட்டமன் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், ஆகஸ்ட் 31ஆம் தேதி அவருக்கு சட்டப்பேரவையின் முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் இந்த இருக்கை அமைந்திருப்பதே பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+