முதல்வராக விஜய் பதவியேற்றுக்கலையா? நேரு ஸ்டேடியத்தில் விம்மி விம்மி அழுத தவெக தொண்டர்கள்
சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதல்வராக பதவியேற்பு என சொல்லப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் விஜய்யை அழைக்காததால் அந்த ஏற்பாடுகள் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வை காண அங்கு வந்திருந்த தொண்டர்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்து கண்ணீர் விட்டனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கமே விழாக் கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதவியேற்கப் போகிறார் என்ற நம்பிக்கையில், நேற்று முதல் அங்கு மிகப்பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தன.

ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து இன்னும் அழைப்பு வராததால், தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
நிசப்தமான நேரு ஸ்டேடியம்
நேற்று வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒளிப்பதிவுக் கருவிகள், அலங்காரப் பொருட்கள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரு ஸ்டேடியம், இன்று பணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ஆளுநர் அர்லேகர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காதது மற்றும் அவர் கேரளா பயணம் மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா தற்காலிகமாகத் தள்ளிப் போயுள்ளது. இதையடுத்து, அங்கு செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் பாதியிலேயே கைவிடப்பட்டன.
தொண்டர்களின் கண்ணீர் போராட்டம்
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைக் காண தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் சென்னைக்கு வந்து குவிந்திருந்தனர். பலர் நேரு ஸ்டேடியத்தின் வாசலிலேயே தவம் கிடந்தனர்.
பணிகள் நிறுத்தப்பட்ட செய்தி தெரிந்ததும், அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பல ரசிகர்கள் ஸ்டேடியத்தின் முன்பே அமர்ந்து "எங்கள் தலைவனை ஏன் அழைக்கவில்லை?" எனக் கோஷமிட்டு கதறி அழுதனர்.
"பல ஆண்டுகளாக இந்தப் நாளுக்காகக் காத்திருந்தோம், கடைசி நேரத்தில் இப்படிச் சதி செய்கிறார்களே" எனத் தொண்டர்கள் கண்ணீர் மல்கக் கூறுவது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
பெண் தொண்டர்கள் பலர் நிலைகுலைந்து தரையில் அமர்ந்து அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏமாற்றத்துடன் திரும்பும் கூட்டம்
பெரும் உற்சாகத்துடன் சென்னைக்கு வந்த தொண்டர்கள், தற்போது மிகுந்த ஏமாற்றத்துடன் தங்களது ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், விஜய்யின் இல்லத்திற்கு முன்னால் இன்னும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
"தாமதமானாலும் தலைவன் வருவது உறுதி" எனத் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டாலும், நேரு ஸ்டேடியத்தில் கலைக்கப்பட்ட அலங்காரங்கள் தமிழக அரசியல் சூழலின் தற்போதைய இழுபறியைப் பறைசாற்றுகின்றன.
-
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார் -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை!












Click it and Unblock the Notifications