அவரும் மாமல்லபுரத்துக்கு வர்றாரா? விஜயின் "பரம ரகசியம்".. தவெக விழாவில் நடக்க போகும் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக 2ம் ஆண்டு விழாவானது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது.. முக்கிய அறிவிப்பை விஜய் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், வேறு சில விஷயங்களும் விழாவில் பேசப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்றைய தினம் தவெக ஆண்டு விழாவில், 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்களின் இலக்கு என அறிவித்த விஜய், அதனை கருத்தில் கொண்டே தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்..

Vijay tvk Tamilaga Vetri Kazhagam

ரகசிய கூட்டம்

பொதுவாக அரசியல் கட்சிகளின் ஆண்டு விழா என்றால் பரந்த பொதுவெளியில் நடைபெறும்.. அதுபோலத்தான் தவெக ஆண்டு விழாவும் நடத்த முடிவாகியிருந்ததாம். ஆனால், அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது, உரை நிகழ்த்துவது, போன்றவை அனைத்தும் வெளியே தெரியாத வகையில் இருக்க என்பதற்காகவே, ரகசிய கூட்டமாக நடத்த முடிவானதாம்.

இந்த விழாவுக்கு, பிரசாந்த் கிஷோரின் வருகையானது, அனைத்து கட்சிகளின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.. தேர்தலுக்கான வியூக பாணிகள, மக்களை எப்படி சந்திப்பது, பிரச்சாரம் மேற்கொள்வது, வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது என நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் இன்று வழங்க உள்ளார்களாம்..

முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு

இப்படி மிக முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படுவதால், இந்த விழாவுக்கு நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. தோரணவாயிலை தாண்டி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, நிர்வாகிகள் செல்போனை ஸ்விட்ச் அப் செய்துவிட வேண்டும் என்றும் முன்கூட்டியே கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் மேடையிலே அறிமுகம் செய்ய போவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணையும் பிற கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கட்சியில் பல முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட உள்ளதாம்.

பிரபலங்கள் இணைகிறார்கள்

விஜய் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள காமராஜர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டவர்களின் வாரிசுகளும், இரட்டை மலை சீனிவாசனின் வாரிசுகளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட பிரபலங்களும் தவெகவில் இன்று இணைகிறார்கள்.

புதிதாக இணைய உள்ளவர்கள் பட்டியலில் உள்ள பிரபலங்கள் யார்? என்ற தகவலை கட்சி தலைமை ரகசியமாக வைத்திருக்கிறதாம்.. தவெகவில் இணையும் அத்தனை பிரபலங்களையும் வரவேற்று விழாவில் விஜய் பேசப்போகிறார்.. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்றாலும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், வலியுறுத்தியும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவ விருந்து ஏற்பாடு

3000 நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ விருந்தும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அசைவ விருந்தில், மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், கோழி வறுவல், இறால் தொக்கு போன்றவை பரிமாறப்படவுள்ளன. ஒரு சாப்பாடு, ரூ.3 ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.. அப்படியானால், சாப்பாட்டுக்கு ரூ.90 லட்சம் செலவு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வட்டமடிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+