இத்தனை வருஷமாக காத்திருந்து நேரம் பார்த்து அவதூறு செய்றாங்க.. மனைவி சங்கீதாவை சூசகமாக சாடிய விஜய்!
நெல்லை: தேர்தலுக்கு 30 நாட்கள் இருக்கும் போது நம்மை சுற்றி இருப்பவர்களை வைத்தே அவதூறு பரப்பினார்கள் என்று மனைவி சங்கீதாவை தவெக தலைவர் விஜய் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து நேரம் பார்த்து அவதூறு பரப்பியதாக கூறிய விஜய், அந்த அவதூறு மக்களிடம் எடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் மீது சங்கீதா முன் வைத்திருந்தார். அதில், விஜய் நடிகை உடன் கள்ளத்தொடர்பில் இருந்தது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது.

நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் கள்ளத்தொடர்பை விஜய் தொடர்ந்து வந்தார். இதையடுத்து நடிகை உடனான திருமணத்தை மீறிய உறவை முறித்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னதை போல் விஜய் நடக்காமல், கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு, விஜய்யால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.
இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் கள்ளத்தொடரை விஜய் தொடர்ந்தார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாக வாசித்து வருகிறோம். அதேபோல் இதனை கேட்டதால், விஜய் தனக்கான உரிமைகளை நிறுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
விஜய்க்கு இது அரசியல் ரீதியாகவும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனிடையே நடிகை திரிஷாவுடன் ஒரே கலரில் ஆடை அணிந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் பங்கேற்றார். அதேபோல் விஜய் - திரிஷா திருமணம் செய்து கொள்ள போவதாக இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திக்கு திரிஷாவின் தாய் லைக் செய்திருந்தார். இதனால் தவெக தொண்டர்கள் பலரும் விரக்தி அடைந்தனர்.
இந்த நிலையில் நெல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மனைவி சங்கீதாவின் பெயரை குறிப்பிடாமல் விஜய் பேசியுள்ளார். அதில் விஜய் பேசுகையில், திமுக நம் மீது எவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள். அவர்களையும் தாண்டி இன்னும் சில பேர் அவதூறு பரப்பினார்கள். நம்மை சுற்றி இருப்பவர்களை வைத்து.. இத்தனை வருஷமாக காத்திருந்து, தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன் நேரம் பார்த்து அவதூறு பரப்பினார்கள்.
அது என்னவென்று உங்களுக்கே தெரியும்.. அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.. எத்தனை சோதனை கொடுத்தாலும் திமுக, பாஜக மற்றும் பலர்-னாலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் மற்றும் பலர் என்று சங்கீதாவை குறிப்பிட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications