தவெகவில் அதிருப்தி! அதிமுக மாஜிக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த ரகசிய வலை! அடுத்த அதிரடி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவி, அங்கு துணைப் பொதுச் செய லாளர் பொறுப்பைப் பெற்றுள்ள அதிமுகவின் முன்னாள் சீனியர்கள் பலருக் கும், தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்கிற ஆதங்கமும் அதிர்ப்தியும் இருக்கிறது. அதேபோல, அவர்களை நம்பி தவெகவிற்கு வந்த அவர்களது ஆதரவாளர்களும் இதே ஆதங்கத்தில் தான் இருந்து வருகிறார்கள்.

இவர்களின் ஆதங்கமும் அதிர்ப்திகளும் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, எம்.சி.சம்பத், வெள்ளமண்டி நடராஜன், சிவபதி, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட சீனியர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இதில் முக்கியமானவர்கள் என்று எடப்பாடிக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.

Vijay

அதிமுகவின் சீனியர்களிடம் எடப்பாடி பகிர்ந்து கொண்ட தகவல்

இந்த நிலையில், இது குறித்து கே.பி.முனுசாமி, ஆர்.வி உதயக்குமார், அக்னி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவின் சீனியர்களிடம் எடப்பாடி பகிர்ந்து கொண்ட போது, "ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் அவர்கள் தவெகவிற்கு சென்று விட்டார்கள். நடிகரின் இமேஜ் மூலம் தங்களை வளப்படுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் தான் தவெகவிற்குள் போனார்கள். அங்கு போனப்பிறகுதான் அவர்களுக்கு புரிந்திருக்கும் ; விஜய் என்கிற நடிகரை சந்திக்கக் கூட முடியாது என்கிற எதார்த்தம். அதனால் தான், தங்களின் எதிர்பார்ப்புகள் நடக்கவில்லைன்னு தெரிந்ததும் அவர்களுக்கு ஆதங்கம் வந்திருக்கிறது. அதனால், அவர்களை மீண்டும் தாய்க் கழகத்திற்கே திருப்பி நாம் அழைக்கலாம்" என எடப்பாடி யிடம் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, "தவெகவில் அதிர்ப்தி யில் இருக்கும் அதிமுகவின் மாஜி சகாக்களிடம் சீக்ரெட்டாகப் பேசிப் பாருங்கள். அவர்களின் மன நிலை என்னவென்று தெரிந்தால் அதற்கேற்ப அவர்களிடம் நான் பேசுகிறேன்" என்று தனது மகன் மிதுனிடம் அறிவுறுத்தி யுள்ளார். தந்தையின் உத்தரவையடுத்து, சம்மந்தப்பட்ட அதிமுக மாஜிக் களை தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் மிதுன்.

தவெகவில் எங்களுக்கு அதிர்ப்தி இருக்கிறது

இதில் சிலர், "தவெகவில் எங்களுக்கு அதிர்ப்தி இருக்கிறதுங்கிறது உண்மை தான். இன்னும் கொஞ்ச காலம் பார்க்கிறோம். சுத்தமாக எங்க ளுக்கு மரியாதை இல்லைன்னா அப்போது தாய்க்கழகத்திற்கு (அதிமுக) திரும்புவதைப்பத்தி யோசிக்கிறோம்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் சிலர், "அதிர்ப்தியும் ஆதங்கமும் எங்களுக்கு இருக்கிறது. அதற்காக, தவெகவிலிருந்து விலக நேர்ந்தால் திமுகவுக்கு போவோமே தவிர மீண்டும் அதிமுகவுக்கு வரும் யோசனை எங்களிடம் இல்லை. திமுகவும் எங்களைக் கூப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் இன்னும் முடிவெடு க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் மிதுன் விவரித்திருக்கிறார்.

இதனை எடப்பாடி பழனிச்சாமியிடம் மிதுன் விவரித்திருக்கிறார். அதனை கட்சியின் மூத்த தலைவர்களிடம் எடப்பாடி விவாதிக்க, "நாம் பலகீனமான இருப்பது போல அவர்களுக்குத் தெரிவதால் தான் மாஜி சகாக்கள் நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதனால் தான் அதிமுகவுக்கு மீண்டும் வருவதற்கு அவர்களிடம் தயக்கம் இருக்கிறது. அதனால், நாம் பலமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசிப்போம். தேவைப்பட்டால் பொதுக்குழுவில் இதைப்பற்றி விவாதிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடியும், இது தான் சரியாக இருக்கும் என ஒப்புக்கொண்டிருப்ப தால், அதிமுகவை வலிமைப்படுத்த சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை அரவணைக்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+