விஜய் அணியும் பெல்ட் விலை தெரியுமா.. அடேங்கப்பா பலருக்கு சம்பளமே அவ்வளவு இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சரும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மறுபக்கம் விஜய்யின் காஸ்ட்ம்யூம் தொடங்கி அவர் அணியும் பெல்ட் கூட வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் அணியும் பெல்ட் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல லூயிஸ் விட்டான் (Louis Vuitton) நிறுவனத்தினுடையதாம். இதன் விலை தான் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அரசியல் வருகைக்கு முன்பு சாதாரண சட்டை, பேன்ட் அல்லது டீஷர்ட், ஜீன்ஸ் அணிவார். அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிம்பிளாகவே வலம் வருவார். மாஸ்டர் பட இசை வெளியீட்டுக்கு மட்டும் கோட் சூட் அணிந்திருந்தார். மற்ற படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அவர் சராசரியான ஆடையில் வலம் வருவார். தவெக கட்சி தொடங்கிய பிறகு அரசியல் நிகழ்ச்சிகளில் வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்தார்.

Vijay Belt

விஜய்யின் பெல்ட்

முதலமைச்சரானதும் கோட் சூட் அணிந்து வந்தார். அவ்வபோது வேட்டி சட்டையும் மணிந்து வருகிறார். சமீபகாலமாக அவர் பக்கா பார்மல் உடையில் டக்கின் செய்து அரசு நிகழ்ச்சிகளில் வலம் வருகிளார். விஜய்யின் ஆடை, ஆபரணங்கள் எல்லாமே டிரெண்ட் ஆகி வருகிறது. விஜய் அணிந்த பெல்டும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல லூயிஸ் விட்டான் (Louis Vuitton) என்கிற பிராண்டின் தயாரிப்பாகும்.

ப்ரீமியம், க்குவாலிட்டி, ராயல் லுக் ஆகியவற்றுக்கு இந்த பிராண்ட் புகழ் பெற்றதாகும். இந்த லெப்டடில் நடுவில் LV என்று மெட்டல் வடிவில் அதன் லோகோ பதிந்திருக்கும். சினிமா, விளையாட்டு பிரபலங்கள் இந்த பிராண்டை அதிகம் விரும்புவார்கள். தோனி, ஷாருக்கான் போன்ற பலர் லூயிஸ் விட்டான் பெல்டை அணிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போதும் இணைந்துள்ளார். அப்படி அதில் என்ன ஸ்பெஷல் உள்ளது.

அடேங்கப்பா இவ்வளவு விலையா

பிரேன்ஸ், ஸ்பெயின், இத்தாலி நாட்டின் கைவினை கலைஞர்களால் இந்த பெல்ட் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இந்த பெல்டை இரண்டு பக்கமும் மாட்டிக் கொள்ளலாம். நீடித்து உழைக்கும். டாப் குவாலிட்டி லெதர், கோட்டட் கேஷ்வாஷ் கொண்டு பெல்ட் உருவாகிறது. எத்தனை வருடங்களானாலும் நிறம் மங்குவது, சேதமடைவது போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த பெல்ட் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.60,000 - 70,000க்கு விற்பனையாகிறது.

குறைந்தபட்சம் ரூ.20,000இல் தொடங்கி அதிகபட்சம் லட்சங்களில் பெல்ட் விற்பனையாகிறது. விஜய் அதில் கிளாஸிச் மாடலை தேர்வு செய்துள்ளார். சமூகவலைதளங்களில் இந்த பெல்ட் பிராண்ட், விலை வைரலாகி வருகிறது. பலரின் வருமானமே அவ்வளவு விலை இல்லை, எளிமையானவராக காட்டி கொண்ட விஜய் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+