உடம்பு தாங்க சரியில்ல.. மனசு அப்படியே தான் இருக்கு! காவலருக்கு சல்யூட் அடித்த ‘கேப்டன்’ விஜயகாந்த்!
சென்னை : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் விஜயகாந்த்துக்கு சல்யூட் செய்து மரியாதை செய்ததை அடுத்து உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவருக்கு மீண்டும் சல்யூட் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்னார் அவரது விரல் அகற்றப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை
மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது நல்ல நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிசிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.

பிறந்தநாள் விழா
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார்.

தொண்டர்கள் உற்சாகம்
அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், பின்னர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆளுயரமாலை, பூங்கொத்து, பொன்னாடைஉள்ளிட்டவற்றை கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சுமார் 10 நிமிடங்களுக்கு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த், பின்னர் அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

காவலருக்கு சல்யூட்
இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாளின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் விஜயகாந்த் அவர்களுக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பெண் காவலருக்கு மீண்டும் சல்யூட் செய்து மரியாதை செலுத்தினார் விஜயகாந்த். இந்த புகைப்படத்தினை 'எங்க கேப்டனுக்கு உடம்பு தாங்க சரியில்ல.. மனசு அப்படியே தான் இருக்கு' என அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications