Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு சிக்கல்.. மதுரை உள்பட 4 ஊரில் தவிக்கும் தவெக? முதல் மாநாட்டுக்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 150 ஏக்கரில் பிரமாண்ட மேடையில் பல லட்சம் தொண்டர்களுடன் பெரிய அளவில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்த மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்ட நிலையில் அங்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி உள்பட மேலும் 2 இடங்களிலும் மாநாட்டுக்கு கட்சி நிர்வாகிகள் இடம் தேடி வருவதாகவும், ஆனால் விஜய் கட்சிக்கு மாநாட்டுக்கான இடம் கிடைப்பதில் பிரச்சனை உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் விஜய். முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார்.. வருகிறார்.. என்ற தகவல்கள் பரவி நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி திடீரென்று விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

actor vijay

அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கும். அதற்கு முன்பான தேர்தலில் கட்சி போட்டியிடாது என்பதையும் அப்போதே அறிவித்தார். இதையடுத்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். குறிப்பாக 150 ஏக்கரில், தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேரை அழைத்து வந்து மாநாட்டில் மாஸ் காட்ட விஜய் காய்நகர்த்தி வருகிறார்.

இதுதொடர்பாக தனது விருப்பங்களை விஜய் தனது கட்சி நிர்வாகிகளிடம் விளக்கமாக கூறி மாநாட்டுக்கு தேவையான பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார். விஜயை பொறுத்தமட்டில் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
மதுரை என்பது தமிழக அரசியலில் மிகவும் ராசியமான இடமாகும். இங்கு தான் பல கட்சிகள் தங்களின் முதல் மாநாட்டை நடத்தி தமிழக அரசியலில் ஜொலிக்க தொடங்கின. இந்த சென்டிமென்ட்டை விஜயும் நம்புகிறார்.

மதுரையில் மாநாடு திட்டம்: இதனால் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்ய கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு மதுரை வலையங்குளத்தில் அதிமுகவின் மாநில மாநாடு நடந்தது. இந்த அதிமுக மாநாடு நடந்த இடத்தை தேர்வு செய்யும்படி விஜய் கூறியுள்ளார். மேலும் மாநாட்டு மேடையை வடிவமைக்க சினிமாவில் பணிபுரியும் கலைஞர்கள் முதல் பல லட்சம் பேருக்கு உணவு சமைக்கும் நிறுவனத்தையும் விஜய் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மதுரையில் விஜய் மாநாட்டுக்கு இடம் கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் சிக்கல்: அதாவது மதுரையில் அதிமுக மாநாடு நடத்தப்பட்ட இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு அனுமதி பெறும் பணிகளை கட்சி நிர்வாகிகள் தொடங்கினர். முதற்கட்டமாக அதிமுக மாநாடு நடந்த இடங்களின் உரிமையாளர்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அணுகினர். முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் தேர்வு செய்த அதிமுக மாநாடு நடந்த பகுதியில் புதிதாக பள்ளி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடம் கிடைப்பதில் பிரச்சனை உருவாகி உள்ளது.

திருச்சியிலும் பிரச்சனை: இதையடுத்து மதுரைக்கு பதில் திருச்சியில் மாநாடு நடத்தலாம் என்ற நோக்கத்தில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக அரசியலை பொறுத்தமட்டில் மதுரைக்கு அடுத்தபடியாக மாநாட்டுக்கு பெயர் பெற்ற இடம் திருச்சியாகும். திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்பம் ஏற்படம் என்ற எண்ணம் இப்போதும் உள்ளது. இந்நிலையில் திருச்சியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருப்பினும் 150 ஏக்கர் வரையிலான இடம் என்பது தொடர்ச்சியாக கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் தமிழக வெற்றிக் கழகம் தேர்வு செய்த இடம் முழுவதுக்குமான அனுமதி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை - சேலம்: மதுரை, திருச்சியில் இப்படியான சிக்கல் உள்ள நிலையில் தற்போது கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் மாநாடு நடத்துவதற்கான இடத்தை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் விஜய் மதுரை அல்லது திருச்சியில் தான் தனது கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதில் உறுதியாக உள்ளாராம். இதனால் பிற இடங்களில் மாநாடு நடத்த விஜய் சம்மதிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+