கடன் வாங்கி செலவு செய்வது தப்பு! யாருக்கு அட்வைஸ் சொல்கிறார் விஜய்? கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தியை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். அதில், "கடன் வாங்கி செலவு செய்வது, பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்" என்று கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் தற்போது புதிய விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

பங்கு வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,000 கோடியை திரட்ட, சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது. இப்படி இருக்கையில், தற்போது கடன் குறித்து முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துக்கள், யாருக்கானது? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Vijay

கேள்வி எழுப்பும் நிபுணர்கள்

"செலவு செய்ததை போக.. மீதியை சேமிக்காமல், சேமித்ததை போக மீதியை செலவு செய்ய வேண்டும். ஒருவர் கடன் வாங்கி செலவு செய்வது, பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்" இதுதான் முதலமைச்சரின் உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தி. இந்த டையலாக் என்னவோ கேட்க நல்லாதான் இருக்கு.. ஆனால், எதார்த்தத்தில் தமிழ்நாடு அரசு இப்படித்தான் நடந்துக்கொள்கிறதா? கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,000 திரட்ட அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, விஜய் சொன்ன டயலாக்குடன் பொருத்தி பார்த்தால்.. தமிழ்நாடு அரசு செய்வது தவறில்லையா? என நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் கடன்

ஏற்கனவே தமிழ்நாடு அரசின் கடன், ரூ.10.14 லட்சம் கோடியாக இருக்கிறது. விஜய், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது.. இந்த கடனை கடுமையாக விமர்சித்து இருந்தார். கடந்த திமுக ஆட்சி, சரியாக நிர்வாகம் செய்யாமல்.. அதிக அளவில் கடன் வாங்கி குவித்து இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இப்பொழுது, அவர் முதலமைச்சராக பதவி ஏற்று ஆறு மாதங்கள் ஆன நிலையில்.. பங்கு வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,000 கோடியை திரட்ட முடிவெடுத்து இருக்கிறார்.

மலையளவு வித்தியாசம்

தமிழ்நாடு அரசு இப்படி கடன் வாங்குவது இதுதான் முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் திமுக ஆட்சி காலத்திலும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் கடன்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தியில் சொன்ன கருத்துக்களுக்கும், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பது ஏன்? என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசு செய்ய வேண்டியது

மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு, தன்னளவில் கடன் வாங்காமல் சொந்த வருவாயை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, வேலை வாய்ப்புகளை தமிழ்நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும். சென்னையில் மட்டும் தொழிற்சாலைகளை வளர்த்து, மக்களை ஓரிடத்தில் குவிய வைக்காமல்.. உள் மாவட்டங்களிலும், குறிப்பாக மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும், வேலைவாய்ப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு விரிவு படுத்த வேண்டும்.

அரசு இதையெல்லாம் செய்யுமா?

தொழிற்சாலைகளில், தொழிலாளர் நல சட்டங்கள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாடு மாதிரி உழைத்தாலும்.. சம்பளம் பத்தவில்லை! விலைவாசி அந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பது தான் மக்களின் புலம்பலாக இருக்கிறது. எனவே, தொழிலாளர் நல சட்டங்கள் மூலம், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு உழைப்பு ஏற்ற ஊதியம் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதான் தமிழ்நாடு அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

அதேபோல சிறு குறு நிறுவனங்களுக்கு போதுமான அளவுக்கு அரசு நிதி ஆதரவையும், நிதி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+