எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க!
பாம்புக்கு சோப்பு போட்டு குளிக்க வைக்கும் நபரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே.. "உள்ளே திரியறது பல ரூபங்கள்.. அதெல்லாம் வெளியே நடமாட விட்டா பூமி தாங்காதேன்னு ஒரு ஓரமா படுக்க போட்டுருக்கோம்"ன்னு.. அப்படி ஒரு தில்லு பேர்வழிபோலதான் இந்த "தல"யை பார்த்தாலும் நமக்கு தெரியுது!
வீடியோ ஒன்று வைரலாகிறது.. எந்த ஊர், யார் இவர் என்று தெரியவில்லை. பாம்ரூமில் ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு.. சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளார். பக்கத்தில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் உள்ளது. கையில் சோப்பு உள்ளது.
சரி, துணிதான் துவைக்கிறார் போல இருக்கிறது என்று பார்த்தால்.. அவரது கையிலிருந்து நெளிந்து.. ஊர்கிறது! என்னவென்று பார்த்தால் அது ஒரு கருநாக பாம்பு!

சாதாரண பாம்புக்கே அள்ளு கிளம்பிவிடும் நமக்கு.. இவர் சோப்பை அந்த பாம்பு உடம்பு முழுவதும் தேய்த்து விடுகிறார். உடம்பெல்லாம் சோப்பு போட்டுக் கொண்டு இவர் தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்க, அந்த கருநாக பாம்பு தலையோ விசுக்கென தூக்கி கொண்டு நிற்கிறது.
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா ..
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) October 15, 2019
நல்ல பாம்புக்கே சோப்பு போட்டு குளிப்பாட்டிட்டு இருக்காரு😜 pic.twitter.com/D4v0YC5Ldb
நாம் ஒரு பாம்பை தான் குளிப்பாட்டுகிறோம் என்ற ஃபீலிங்கே அவர் முகத்தில் இல்லை. கொஞ்ச நேரத்தில் தூக்கி கொண்டு இருந்த அந்த தலையை அப்படியே பிடித்து, அதற்கும் சோப்பால் தேய்த்து விட்டு, பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து குளிப்பாட்டி விடுகிறார்.
வீடியோ பார்க்கும்போது நமக்கே ஒரு கிலி வந்துவிடுகிறது. நாம் இதுவரை பார்த்த பாம்பாட்டிகள் இப்படி செய்திருப்பார்களா என்று தெரியாது.. உண்மையிலேயே இந்த தலைக்கு தில்லுதான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications