தமிழகத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது.

தானியங்கி ஊர்திப் பொறியியல், மின்னணு வன்பொருள்,வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம்,அழகியல் நிபுணர், சுகாதாரம் ஆகிய பாடங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . அதிமுக ஆட்சியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் , நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications