சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொட்டும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு கிடுகிடு அதிகரிப்பு.. தற்போது எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தொடர் மழை காரணமாகவும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

Recommended Video

    ரெட் அலர்ட்... செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு 2000 கன அடியாக உயர்வு!

    இதன் காரணமாக காலை முதல் 2000 கன அடியாக திறந்து விடப்பட்ட உபரி நீரானது தற்போது கூடுதலாக ஆயிரம் கன அடி உயர்த்தி 3 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தற்போதைய ஏரியின் நீர்மட்டம் உயரம் 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2779 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 2000 கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்ற காரணத்தால் தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் காலை முதலே பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலைகளில் குளம்போல் மழைத் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தேங்கி இருக்கும் மழை தண்ணீரில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்த்து செல்கின்றன.

    வாகனங்கள் பழுது

    வாகனங்கள் பழுது

    ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதடைந்து நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே விரைந்து நகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மழை

    காஞ்சிபுரம் மழை

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் விரைவாக அப்புறப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் நெகிழிப் பைகளை நீர்வரத்து செல்லும் பாதையை அடைத்து இருந்தது நகராட்சி ஊழியர்கள் வெறும் கைகளாலேயே கழிவுநீர் கால்வாய்க்குள் கையைவிட்டு அடைத்திருந்த நெகிழிப் பைகளை அப்புறப்படுத்தினர். நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளாலேயே கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்துவது பொதுமக்களிடை அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் மழையால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    சென்னை நிலவரம்

    சென்னை நிலவரம்

    இதேபோல, சென்னை பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் அறிவித்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகின்ற குறிப்பாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கிழக்குக் கடற்கரை சாலை சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகின்றன.

    வெள்ள நீர்

    வெள்ள நீர்

    அதன் தொடர்ச்சியாக தற்போதும் அவ்வப்போது கனமழை விட்டு விட்டு பெய்து வருகின்ற. இந்த சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி செல்கின்றனர். மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். விட்டு விட்டு மழை பெய்வதால் இந்த சாலையில் தண்ணீர் தேங்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து கனமழை பெய்தால் இந்த சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களையும், வாகன ஓட்டிகளையும் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது.

    English summary
    Chembarambakkam lake news: Due to the continuous rains and the formation of a depression in the Bay of Bengal, the water supply to Chembarambakkam Lake has continued to increase. Due to this, the surplus water which was released in 2000 cubic feet in the morning is now being pumped out by an additional one thousand cubic feet and the excess water is being discharged by 3 thousand cubic feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X