அனைவருக்கும் வீடு... 2031க்குள் குடிசையில்லாத தமிழகமாக மாற்றுவோம் - மு.க ஸ்டாலின் உறுதி
2031க்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். 2031ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிரடாய் சார்பில் ஸ்டேட்காந்2021 என்ற 2ஆம் நாள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு,மனை பத்திரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி
3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. மாநில பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுகின்றன.

2 மடங்கு வளர்ச்சி
கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள் சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுரஅடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது.

12 மண்டலங்கள்
கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார்.

வரைபட அனுமதி 8 ஆண்டுகள்
கிளாம்பாக்கம் , குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். 2026 முதல் 2046ஆம்ஆம் ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

9.53 லட்சம் வீடுகள்
2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications