சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெரியாமல் செய்த தப்பு.. சட்ட சிக்கலில் மாட்டிய எடப்பாடி.. ஓபிஎஸ் கையில் 8 அஸ்திரம்! வெலவெலத்த அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் என்று பெருவாரியான உறுப்பினர்கள் தீவிர ஆதரவு அளித்து வருகிறார்கள்.

Recommended Video

    அதிமுக நாளிதழில் இருந்து OPS பெயர் நீக்கம்... தொடர்ந்து பறிபோகும் அதிகாரங்கள் *Politics

    இதனால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பிரச்சனை நடப்பதோ அதிமுகவில்.. ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் நடக்காத திருப்பங்கள் கிடையாது. அப்படி இருக்க.. அதிமுகவில் வரும் நாட்களில் எவ்வளவு பெரிய திருப்பங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம்.

    அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்? அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?

     பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    அந்த வகையில் பெருவாரியான நிர்வாகிகள் பலம் இருந்தாலும் கூட வருகிற ஜூலை 11ம் தேதி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவதில் பெரிய சிக்கல் இருப்பதாகவே அதிமுக சட்ட பிரிவை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம்.. எடப்பாடிக்கு நிர்வாகிகள் ஆதரவு இருக்கிறது. இருந்தாலும் சட்ட ரீதியாக அவருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன.. அவரின் அணி தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் இப்போது அவருக்கே எதிராக முடிந்துள்ளது என்கிறார்கள். இதனால் ஒபிஎஸ் வசம் 8 மிகப்பெரிய அஸ்திரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். அது என்னென்னெ என்று.. பார்க்கலாம்!

     முதல் அஸ்திரம்

    முதல் அஸ்திரம்


    1. இதில் எடப்பாடி தரப்பு செய்த முதல் தவறு - 23 தீர்மானங்களை நிராகரித்தது. இது ஏன் தவறு என்றால் தீர்மானங்களை படித்து காட்டிய பின்பே அதை நிராகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் அவசரப்பட்டு நிராகரித்ததால் அது சட்ட ரீதியாக தவறானதாக மாறிவிடுகிறது.

    2. இரண்டாவது அஸ்திரம், தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். ஓபிஎஸ் தீர்மானங்களை முன் மொழிந்தார் என்பதால் அதை படித்துக்காட்டியதாக பொருள் கொள்வோம் என்றே வைத்துக்கொள்வோம். இந்த தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பதால் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் செப்டம்பர் வரை இதற்கு அவகாசம் உள்ளது. அதற்குள் எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றலாம். எனவே ஓபிஎஸ் இப்போதும் ஒருங்கிணைப்பாளர்தான். பதவி இன்னும் இருக்கிறது.

    முக்கிய அஸ்திரம்

    முக்கிய அஸ்திரம்

    3. அப்படி இருக்கும் போது இப்போதும் ஓபிஎஸ்தான் பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழு அறிவிப்பு அவை தலைவர் உசேன் மூலம் வெளியிடப்பட்டது சட்ட ரீதியாக செல்லாது.

    4. ஆனால் எடப்பாடி தரப்பு இதற்கு வைக்கும் வாதத்தில்.. சிவி சண்முகம் கோரிக்கை மனு கொடுத்தார். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு, பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி நடத்த சொல்லி இருக்கின்றனர். அந்த மனுவைத்தான் சண்முகம் கொடுத்தார். அதனால் பொதுக்குழுவை ஓபிஎஸ் கூட்ட வேண்டியது இல்லை.. அவைத்தலைவர் கூட்டினால் போதும் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியே பார்த்தாலும் சட்ட விதிப்படி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி

    பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி

    5. சரி பொதுக்குழுவை பொதுக்குழு உறுப்பினர்களே கூட்டலாம் என்று சொல்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.. அப்படியே பார்த்தாலும் கடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். இதில் முதல் தீர்மானமே.. கழகத்தின் அனைத்து தேர்தல்களுக்கும், அதாவது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட , ஒன்றிய, பொதுக்குழு தேர்தல் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல்களுக்கும் ஒப்புதல் வழங்குவது தொடர்பான தீர்மானம் ஆகும். இந்த தேர்தல் ஒப்புதல் தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் பதவி இழக்கிறார்கள். இதனால் அவர்கள் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கடிதமும் அர்த்தமற்றதாகி விடுகிறது.

    அஸ்திரம் 6

    அஸ்திரம் 6

    6. 23 தீர்மானத்தை ரத்து செய்ததன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தமாக பதவி இழக்கிறார்கள். சரி எடப்பாடி தரப்பு.. இவர்கள் பதவி இழக்கவில்லை என்று வாதத்தை வைக்கிறார்கள் வைத்துக்கொள்வோம்.. அப்படி என்றால்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் பதவி இழக்கவில்லை. அவர்களும் பதவியில் தொடர்வார்கள். எனவே ஒருங்கிணைப்பாளருக்கே பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் உள்ளது. கிட்டத்தட்ட இடியாப்பம் போன்ற சட்ட சிக்கல் எடப்பாடி தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

    அஸ்அஸ்திரம் 7 திரம் 7

    அஸ்அஸ்திரம் 7 திரம் 7

    7. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த தீர்ப்பில் கூட.. நீங்கள் என்ன தீர்மானத்தை வேண்டுமானால் கொண்டு. வாருங்கள். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்று முறையில் ஓபிஎஸ் வரைவு தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இதனால் ஒற்றை தலைமை தீர்மானத்தை.. அதாவது பொதுச்செயலாளர் தீர்மானத்தை கொண்டு வர ஓபிஎஸ் அனுமதிக்க வேண்டும். இந்த உயர் நீதிமன்ற உத்தரவை மீறினால் அது contempt of court. எனவே அதிமுக பொதுக்குழு அதை செய்யாது. எனவே இதை தடுக்க எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். அதுவும் பல வாரங்களை பிடிக்க கூடிய நீண்ட சட்ட போராட்டமாக இருக்கும்.

    டெல்லி அஸ்திரம்

    டெல்லி அஸ்திரம்

    8. இதெல்லாம் போக டெல்லியில் நிர்வாகிகளை, பாஜக தலைகளை பார்த்து ஓபிஎஸ் விரிவாக பேசி இருக்கிறார். சில பாஜக தலைவர்கள் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தெம்பாக தென் மாவட்ட சுற்றுப்பயணத்தையும் தொடங்கி உள்ளார். பாஜக ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் அதுவும் கூட எடப்பாடிக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    What are the 8 points that will legally help O Panneerselvam over Edappaadi Palanisamy in AIADMK?ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X