சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு 2வது லட்டு.. டிக் அடிக்கப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பரந்தூரில் அமைக்கப்படும் இரண்டாவது விமான நிலையம் குறித்த சிறப்பம்சங்களை பார்ப்போம்.

Recommended Video

    Chennai-ன் 2nd Airport, இடத்தை அறிவித்த மத்திய அரசு

    சென்னையில் திரிசூலத்தில் உள்ள விமான நிலையத்தில் 150 லட்சம் மக்கள் நெருக்கடியை கையாளும் திறமை கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் இந்த விமான நிலையத்திற்கு 220 லட்சம் பேர் வந்தனர். இதனால் சென்னைக்கு அருகே இன்னொரு புதிய விமான நிலையம் வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.

    இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி திருப்போரூர், படாளம், பரந்தூர் (காஞ்சிபுரம்), பன்னூர் (திருவள்ளூர்) ஆகிய இடங்களாகும்.

    ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம்: மத்திய அமைச்சர் வி.கே.சிங்ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம்: மத்திய அமைச்சர் வி.கே.சிங்

    விமான நிலைய அதிகாரிகள்

    விமான நிலைய அதிகாரிகள்

    இந்த 4 இடங்களை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த இரு இடங்களில் எந்த இடம் என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசும் ஆலோசனை நடத்தினர்.

    இரண்டாவது விமான நிலையம்

    இரண்டாவது விமான நிலையம்

    இந்த நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இந்த பரந்தூரில் 4,791 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு திரிசூலத்திலிருந்து பயணிக்க 1.5 மணி நேரம் ஆகும்.

     50 சதவீதம் இடம்

    50 சதவீதம் இடம்

    50 சதவீத இடம் மாநில அரசினுடையது , மீதமுள்ள 50 சதவீத இடத்தை கையகப்படுத்த வேண்டும். இந்த பரந்தூரை நிலத்தின் விலை, தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த பரந்தூருக்கு 70 கி.மீ தூரம் ஆகும். 4791 ஏக்கர் இடம் உள்ள நிலையில் கூடுதலா 200 ஏக்கர் நிலம் தென் மேற்கு பகுதியில் தேவைப்படுகிறது.

    ரன்வே

    ரன்வே

    இந்த இடத்தில்தான் ரன்வே அமைக்கப்படவுள்ளது. அம்பத்தூரில் இருந்து பரந்தூருக்கு 61 கி.மீ. தூரமாகும். இதற்கு 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். திருவொற்றியூரிலிருந்து 83 கி.மீ. தூரம் தூரத்தில் உள்ள பரந்தூரை அடைய 2 மணி நேரம் 55 நிமிடங்களாகும். அது போல் எழும்பூரிலிருந்து 53 கி.மீ. தூரமும் 1 மணி நேரம் 55 நிமிடங்களும். சோளிங்கநல்லூரிலிருந்து 61 கி.மீ. தூரமும் 1 மணி நேரம் 45 நிமிடங்களும், தாம்பரத்திலிருந்து 73 கி.மீ. தூரத்திலும் 1 மணி நேரம் 54 நிமிடங்களும் பயண தூரம் ஆகும்.

    2 விமான ஓடுதளங்கள்

    2 விமான ஓடுதளங்கள்

    இங்கு 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும். சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. இதையடுத்து தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிளியரன்ஸ் சர்ட்பிகேட்டை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுக்கும். இதன் பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்.

    English summary
    What are the accessiblity from Chennai Airport to Parandur. Special features the Chennai's second airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X