சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டியிடும் தொகுதிகள் எவை எவை.. திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த திமுக, எந்தெந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்பது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. இந்த 25 தொகுதிகள் எவை என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

What are the contesting constituencies .. DMK - Congress talks today

காங்கிரஸ் கட்சி கடந்த 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகள் அனைத்தும் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அந்தத் தொகுதிகளை திமுகவும் ஒதுக்க முன்வரும் எனத் தெரிகிறது. பிற தொகுதிகள் குறித்து திமுகவோடு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது.

கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கரூர் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில்காங்கிரஸ் போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிகளில் அதிக இடங்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

English summary
The DMK, which has allotted 25 seats to the Congress party, is in talks today over which seats will be allotted to the Congress party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X