பர்சனல் லோன் எடுக்க போறீங்களா? இந்த டாக்குமெண்ட் எல்லாம் ரொம்ப அவசியம்.. வெளியான RBI ரூல்ஸ்
சென்னை: தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கும்போது என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியாகி உள்ளன.
தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கும்போது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சில முக்கிய ஆவணங்களை சரிபார்க்கும். கடன் வாங்குபவர் அதைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளவரா என்பதை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காக, வருமான சான்று, முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்றவற்றை கேட்பார்கள்.

பர்சனல் லோன் விதிமுறை
இருப்பினும், தனிநபர் கடன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் கடன் வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்து (வங்கி அல்லது ஃபின்டெக் நிறுவனம்) மற்றும் வேலைவாய்ப்பின் வகையைப் பொறுத்து (சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவர்) சற்று மாறுபடும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் செயல்முறை எளிதாக இருக்கலாம்.
பெரும்பாலான வங்கிகள், குறிப்பாக நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, உடனடியாகச் செயல்படுத்துவதற்கு மிகக் குறைந்த ஆவணங்களையே கோருகின்றன. ஆன்லைனில் விரைவான விண்ணப்பங்களுக்கு டிஜிட்டல் ஆவணப் பிரதிகளைத் தயார் செய்து கொள்வது நல்லது. கடன் செயலாக்கத்திற்குத் தேவைப்படும் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சம்பளம் பெறுபவர்களுக்குத் தேவையான ஆவணங்கள்:
1. அடையாளச் சான்று (KYC): பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்.
2. முகவரிச் சான்று: ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பயன்பாட்டு பில் (மின்சாரம்/கேஸ், 3 மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது), அல்லது வாடகை ஒப்பந்தம்.
3. வருமானச் சான்று: கடந்த மூன்று மாத சம்பளச் சீட்டுகள், படிவம் 16 அல்லது சமீபத்திய வருமான வரி அறிக்கை (ITR).
4. வங்கிக் கணக்கு அறிக்கை: கடந்த 3 முதல் 6 மாதச் சம்பள வங்கிக் கணக்கு அறிக்கைகள்.
5. வேலைவாய்ப்புச் சான்று: நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது நியமனக் கடிதம்.
சுயதொழில் செய்பவர்களுக்குத் தேவையான ஆவணங்கள்:
1. அடையாள மற்றும் முகவரிச் சான்று (KYC): மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் (பான் மற்றும் ஆதார் கட்டாயம்).
2. வருமானச் சான்று: கடந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கை (ITR), லாப நட்ட அறிக்கை (P&L), இருப்புநிலை அறிக்கை (Balance Sheet).
3. வங்கிக் கணக்கு அறிக்கை: கடந்த 6 முதல் 12 மாத வங்கிக் கணக்கு அறிக்கை, பணப்புழக்கம் மற்றும் விற்பனை வருவாயைக் காட்ட.
4. வணிகச் சான்று: GST பதிவு, கடை சட்டம் உரிமம் (Shop Act License) அல்லது கூட்டாண்மை பத்திரம் (Partnership Deed).
சிபில் ஸ்கோர் வழிகாட்டு நெறிமுறைகள்
ஏற்கனவே வங்கிகள் தற்போது இருப்பது போல 15 நாட்களுக்கு ஒருமுறை Cibil Score தகவல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, இனி வாராந்திர அடிப்படையில் Cibil Scoreஐ கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs) அனுப்ப வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம் கடன் வழங்குநர்கள் கடன் அண்டர்ரைட்டிங் செயல்முறைகளில் Cibil Score அறிக்கைகளை அதிகமாக நம்பி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது.
இந்த நடவடிக்கையின் முக்கிய காரணம், கடன் மோசடி செய்பவர்கள் ஒரு கடன் வாராக்கடனாக மாறியதற்கும், அது CIC-க்கு அறிக்கை செய்யப்படுவதற்கும் இடையிலான காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதாகும். அதாவது வாரக்கடன் ரிப்போர்ட் செல்லும் முன் சில அந்த இடைவெளியை பயன்படுத்தி புதிய லோன் எடுக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், இந்தத் தகவல் CIC-யில் credit score புதுப்பிக்கப்படாததால், மோசடி செய்பவர்கள் பிற கடன் நிறுவனங்களிடமிருந்து (CIs) கடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
இத தடுக்கவே இனி வாரம் ஒரு முறை Cibil score ரிப்போர்ட்டுகளை CICக்கு அனுப்ப ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம். credit score முறைகேடு நடக்காமல் இருக்க.. மோசடியாளர்கள் கடன் பெறாமல் இருக்க இந்த புதிய முறையை பயன்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications